டி20 போட்டியில் இந்தியா டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு- அணியில் மாற்றமில்லை

 

வங்காள தேசத்திற்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளார்.

 

இந்தியா, இலங்கை, வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான நிதாஹாஸ் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியாவை இலங்கை வீழ்த்தியது.

இன்று நடைபெறும் 2-வது ஆட்டத்தில இந்தியா – வங்காள தேசம் மோதுகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளார்.

இந்த அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. முதல் ஆட்டத்தில் விளையாடிய 1. ரோகித் சர்மா, 2. தவான், 3. சுரேஷ் ரெய்னா, 4. மணிஷ் பாண்டே, 5. தினேஷ் கார்த்திக், 6. ரிஷப் பந்த், 7. விஜய் சங்கர், 8. வாஷிங்டன் சுந்தர், 9. சாஹல், 10. சர்துல் தாகூர், 11. உனத்கட் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

வங்காள தேச அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. தமிம் இக்பால், 2. சவுமியா சர்கார், 3. மெஹ்முதுல்லா, 4. முஷ்பிகுர் ரஹிம், 5. லித்தோன் தாஸ், 6. சபீர் ரஹ்மான். 7. மெஹிது ஹசன், 8. நஸ்முல் இஸ்லாம், 9. ருபெல் ஹொசைன், 10. தஸ்கின் அஹமது. 11. முஷ்டாபிஜூர் ரஹ்மான்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top