மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது இன அழிப்பு தொடர்கிறது – ஐ.நா. குற்றச்சாட்டு

மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது மியான்மார் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. சுமார் 7 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்கதேசத்துக்கு அகதிகளாக சென்றுள்ளனர். அங்குள்ள அகதிகள் முகாம்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. தொடர்ந்து ஏராளமான அகதிகள் வந்தவண்ணம் உள்ளனர். ரோஹிங்கியா முஸ்லிம்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.

ஆகஸ்ட் மாதம் மினமார் இராணுவம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது நடத்திய தாக்குதலில் சுமார் 700,000 பேர் பங்களாதேஷ் எல்லைக்கு வெளியே ஓடி அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்தனர்., இராணுவத்தினர் ரோஹிங்கியா முஸ்லிமகளை கொலை, கற்பழிப்பு மற்றும் சிதைவு ஆகியவற்றின் தொடர்ச்சியான சாட்சியங்கள் வெளி உலகத்திற்கு அம்பலமாகியுள்ளது.

அகதிகள் முகாம்களில் அவர்களுக்கு நிவாரண பொருட்கள் சரியாக சென்று அடைவது இல்லை என்னும் புகார்களும் எழுந்துள்ளது. புதிதாக வந்த அகதிகள் குழுவை ஐ.நா. சபையின் மனித உரிமைகளுக்கான அமைப்பின் துணை பொதுச் செயலாளர் ஆண்ட்ரூ கிளிமோர் பார்த்தார்.

ஆண்ட்ரூ கிளிமோர் அகதிகளிடம் அவர் பேசியதாவது:

மியான்மர் நாட்டில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான இன அழிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தீவிரவாதம் என்ற பிரசாரம் மூலமும் தேவையான உணவுப் பொருட்கள் கிடைக்காமலும் செய்து ரோஹிங்கியா முஸ்லிம்கள் வலுக்கட்டாயமாக வெளியேற வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மியான்மர் அரசு அகதிகளைத் திரும்ப அழைத்துக் கொள்வதாகக் கூறினாலும் ராணுவம் அவர்களை வெளியேற்றி வருகிறது. இப்போதுள்ள சூழலில் அகதிகள் தங்கள் நாட்டுக்குத் திரும்ப வாய்ப்பு இல்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top