வெற்றிமாறன்-தனுஷ் “வடசென்னை” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் வடசென்னை. இந்த படத்தை தனுஷ் அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளன. லைகா புரொடக்‌ஷன்ஸ் இந்த படத்தை வெளியிடுகிறது.

வடசென்னை படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஆன்ட்ரியா, சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார்.

இந்தப் படத்தை, மூன்று பாகங்களாக இயக்கத் திட்டமிட்டுள்ள வெற்றிமாறன், தற்போது முதல் பாகத்தை இயக்கி முடித்துள்ளார்.

கேரம் விளையாட்டு வீரராக இந்தப் படத்தில் நடித்துள்ளார் தனுஷ். படத்தில் தனுஷ் கதாபாத்திரத்தின் பெயர் அன்பு. 35 ஆண்டுகளுக்கு மேலாக வடசென்னையில் வசிப்பவனின் வாழ்க்கைதான் இந்தப்படம். வடசென்னை பகுதியையும் அந்த மக்களின் வாழ்க்கையையும் கதைக்களமாக கொண்ட படம்.

வடசென்னை படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை பொறுத்தே இரண்டம் பாகத்தை வெளியிட இருப்பதாக படக்குழு முன்னரே அறிவித்துள்ளது. ஜூன் மாதம் படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top