புதிய சம்பள ஒப்பந்தம் பிசிசிஐ வெளியிட்டது: கோலி ரூ.7 கோடி, தோனி ரூ.5 கோடி பெறுவார்கள்

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள உயர்வு ஒப்பந்தம் நீட்டிக்கப்படாமல் இருந்தது. வீரர்களுக்கான சம்பளத்தை அதிகரித்து தர வேண்டும் என்று இந்திய அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் ஆகியோர் கிரிக்கெட் வாரிய நிர்வாக குழுவிடம் வேண்டுகோள் விடுத்து இருந்தனர்.

இதன்படி வீரர்களுக்கு சம்பள உயர்வு ஒப்பந்தத்தை கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.

முன்னதாக இருந்த 3 கிரேடுகள் நான்காக அதிகரிப்பட்டுள்ளது. ஏ+, ஏ, பி மற்றும் சி கிரேடு அடிப்படையில் வீரர்கள் தரம் பிரிக்கப்பட்டுள்ளனர். தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் வீரர்களை தரம் பிரித்து உள்ளார்.

பிசிசிஐ வெளியிட்டுள்ள புதிய ஊதிய ஒப்பந்த பிரிவில் ஏ பிளஸ் ஒப்பந்த பிரிவில் கேப்டன் விராட் கோலி, ஷிகர் தவன், ரோஹித் சர்மா, புவனேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்ட 5 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். ஏ பிளஸ்’ ஒப்பந்தத்தில் உள்ள வீரர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 7 கோடி ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். இதன்படி, இவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.7 கோடி ஊதியம் கிடைக்கும்.

இரண்டு உலக கோப்பையை வென்று கொடுத்த சீனியர் வீரரான டோனி ‘ஏ’ கிரேடில் இடம் பிடித்துள்ளார். ‘ஏ’ பிரிவில் எம்.எஸ்.தோனி, அஸ்வின், ரவிந்திர ஜடேஜா, முரளி விஜய், புஜாரா, அஜிங்க்ய ரஹானே, விருதிமான் சாஹா ஆகிய 7 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு ரூ. 5 கோடி ஊதியம் அளிக்கப்படும். ‘பி’ பிரிவில் கே.எல்.ராகுல், உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ், சாஹல், ஹர்திக் பாண்டியா, இசாந்த் சர்மா, தினேஷ் கார்த்திக் ஆகிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.3 கோடி ஊதியம் கிடைக்கும்.

கேதர் ஜாதவ், மணீஷ் பாண்டே, அக்சர்படேல், கருண் நாயர், சுரேஷ் ரெய்னா, பார்தீவ் படேல், ஜெயந்த் யாதவ் ஆகியோர் ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் ஊதியம் வழங்கப்படும். மொகமது ஷமி பெயர் நீக்கப்பட்டுள்ளது.

மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனைகள் மூன்று கிரேடுகளாக தரம் பிரிக்கப்பட்டுள்ளனர். ‘ஏ’ கிரேடில் உள்ளவர்களுக்கு ரூ.50 லட்சமும், ‘பி’ கிரேடில் உள்ளவர்களுக்கு ரூ.30 லட்சமும், ‘சி’ கிரேடில் உள்ளவர்களுக்கு ரூ.10 லட்சமும் சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top