எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்க; ஆர்பாட்டம் மற்றும் முற்றுகை; மே பதினேழு இயக்கம்

திரிபுரா சட்டசபை தேர்தலில் 25 ஆண்டுகால கம்யூனிஸ்டு ஆட்சி மாற்றம் பெற்று தற்போது மதவாத கட்சியான பா.ஜ.க வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது. ஆட்சியில் அமர்ந்த முதல் நாள் அன்றே பா.ஜ.க அரசு திரிபுரா மாநிலத்தில் உள்ள லெனின் சிலையை அகற்றியது, இது தொடர்பாக பா.ஜ.க. தேசிய செயலாளர் எச். ராஜா பேஸ்புக்கில் வன்மையான வகையில் கருத்தினை பதிவு செய்திருந்தார். அதில், ‘இன்று திரிபுராவில் லெனின் சிலை, நாளை தமிழகத்தில் சாதிவெறியர் ஈவேரா ராமசாமி சிலை’ என கூறியிருந்தார். அவரது கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஜாதி ஒழிப்பு, சமத்துவம் மற்றும் சமூக நீதிக்காக போராடிய பெரியாரின் சிலையை உடைப்போம் என்ற எச்.ராஜாவின் கருத்துக்கு தமிழ்நாடு முழுவதும் கடும் கண்டனமும் எதிர்ப்பும் வலுத்த நிலையில் அவர் தனது கருத்தை நீக்கியதுடன், வருத்தமும் தெரிவித்தார். எனினும், எச்.ராஜாவுக்கு எதிராக பல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கங்கள் போராட்டம் நடத்தின.

பெரியார் சிலையை உடைத்த பிஜேபியை கண்டித்தும், பெரியார் சிலையை உடைக்க தூண்டி தமிழகத்தில் வன்முறையை தூண்டும் விதமாக தொடர்ச்சியாக பேசிவரும் எச்.ராஜாவை கைது செய்ய வலியுறுத்தியும், பெரியார்,அம்பேத்கர், லெனின் சிலைகள் உடைத்து இந்தியாவை சனாதன தர்மத்தை நோக்கி நகர்த்தும் ஆர்.எஸ்.எஸ் ஐ கண்டித்தும், எச்.ராஜாவை கைதுசெய்ய வலியுறுத்தியும் மே17 இயக்கம் சென்னை தி.நகரில் இருக்கும் பெரியார் சிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் மற்றும் மதுரையில் உள்ள பாஜக அலுவலகத்தையும் முற்றுகையிட்டனர்.

பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்க்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். எச்.ராஜாவின் படத்தை எரித்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

பா.ஜ.க. தேசிய செயலாளர் எச். ராஜாவின் வன்மமான பேச்சு குறித்து மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பிரவீன் நிருபர்களிடம் கூறியதாவது:-

லெனின், அம்பேதர் மற்றும் பெரியார் சிலை உடைப்பு என்பது வெறும் சிலை உடைப்பாக கருதமுடியாது இது பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரானதாகும், உழைக்கும் மக்களுக்கு எதிரான செயலாகும். பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் தொடர்ந்து மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. மேலும், நீட் போன்ற மக்கள் விரோத திட்டங்களை எதிர்த்து மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் இந்த நேரத்தில் எச். ராஜாவின் இந்த பேச்சு மக்களை திசைதிருப்ப செய்யும் சதிச்செயல். தமிழகத்தை வன்முறைகளமாக மாற்ற பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் இந்த செயல்களில் ஈடுபட்டு வருகிறது.

தமிழநாடு பெரியார் மண் தான், தன் வாழ்நாள் முழுவதும் சாதி ஒழிப்பு மற்றும் சமூக நீதிக்காக போராடிய பெரியாரின் செயலை அடுத்து நங்கள் முன்னெடுப்போம். மேலும், தமிழகத்தை கலவரப்பகுதியாக மற்ற நினைக்கும் பா.ஜ.கவின் எச். ராஜா மீது தமிழக அரசு குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யவேண்டும்”.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பின் சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மே 17 இயக்கத்தினரை காவல் துறையினர் கைது செய்தனர். மதுரையில் பா.ஜ.க அலுவலகத்தை முற்றுகையிட மே 17 இயக்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top