மீண்டும் பெரியார் குறித்து வன்மமான பேச்சு – எச்.ராஜா கருத்தால் தொடரும் சர்ச்சை

திரிபுரா சட்டசபை தேர்தலில் 25 ஆண்டுகால கம்யூனிஸ்டு ஆட்சி மாற்றம் பெற்று தற்போது மதவாத கட்சியான பா.ஜ.க வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது. ஆட்சியில் அமர்ந்த முதல் நாள் அன்றே பா.ஜ.க அரசு திரிபுரா மாநிலத்தில் உள்ள லெனின் சிலையை அகற்றியது, இது தொடர்பாக பா.ஜ.க. தேசிய செயலாளர் எச். ராஜா பேஸ்புக்கில் வன்மையான வகையில் கருத்தினை பதிவு செய்திருந்தார். அதில், ‘இன்று திரிபுராவில் லெனின் சிலை, நாளை தமிழகத்தில் சாதிவெறியர் ஈவேரா ராமசாமி சிலை’ என கூறியிருந்தார். அவரது கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஜாதி ஒழிப்பு, சமத்துவம் மற்றும் சமூக நீதிக்காக போராடிய பெரியாரின் சிலையை உடைப்போம் என்ற எச்.ராஜாவின் கருத்துக்கு தமிழ்நாடு முழுவதும் கடும் கண்டனமும் எதிர்ப்பும் வலுத்த நிலையில் அவர் தனது கருத்தை நீக்கியதுடன், வருத்தமும் தெரிவித்தார். எனினும், எச்.ராஜாவுக்கு எதிராக பல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கங்கள் போராட்டம் நடத்தின. மேலும், அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கவேண்டும் என்றும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும் என்றும் தமிழகத்தின் காட்சிகள் மற்றும் இயக்கங்கள் வலியுறுத்தின. ஆனால், அவர் மீது தற்போது வரை தமிழக அரசு எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை.

இந்த சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பெரியார் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார் எச்.ராஜா. திண்டுக்கல் ஒட்டன்சத்திரத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர், தமிழ் மொழியே இருக்கக்கூடாது என்பதற்காக தமிழர் மீது திணிக்கப்பட்டதுதான் திராவிடம் என்று கூறினார்.

தமிழ் என்ற சனியனே இருக்கக்கூடாது என்று ஈ.வே.ரா பெரியார் பேசியதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும், இந்த உண்மைகளை மக்களிடம் எடுத்து சொல்வதால் தான் வசை பாடுகிறார்கள் என்றும் எச்.ராஜா கூறினார். ஹெச்.ராஜாவின் இந்த கருத்து தமிழக அரசியல் வட்டாரத்தில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜாதி ஒழிப்பு, சமத்துவம் மற்றும் சமூக நீதிக்காக போராடிய பெரியாரை மதவாத கட்சியாக அறியப்படும் பா.ஜ.கவின் தேசிய செயலாளர் எச். ராஜா தொடர்ந்து வன்மனமுறையில் பேசி வருவது தமிழகத்தில் கலவரத்தை உருவாக்க பா.ஜ.க சதித்திட்டம் திட்டுவதாக அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top