இலங்கையில் அவசரநிலை அறிவித்த பின்னும், சிறுபான்மையினர் வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல்

இலங்கையில்10 நாட்களுக்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு மேல் இந்த அவசர நிலை நீடிக்கப்பட வேண்டுமா என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முடிவு செய்வார். ஆனால், அப்படி அது நீடிக்கப்படுவதற்கு நாடாளுமன்ற அங்கீகாரம் தேவைப்படலாம்.

இலங்கை கண்டி மாவட்டத்தில் புத்தமதத்தினரான சிங்களருக்கும் இஸ்லாமியருக்கும் இடையில் வெடித்த மோதலால் உச்சகட்டம் அடைந்துள்ள வன்முறையால் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் தெற்கு எல்லையான தமிழகத்தை ஒட்டிய கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடான இலங்கையில் சுமார் 2 கோடியே 10 லட்சம் மக்கள் வாழும் இலங்கையில் 70 சதவீதம் பேர் புத்தமத சிங்களராகவும், பெரும்பாலும் தமிழர்கள் 13 சதவீதமும், இஸ்லாமியர்கள் 9 சதவீதமும் உள்ளனர்.

புத்த மதத்தினர் பிற பிரிவினரை மதமாற்றம் செய்ய முயற்சித்து வருவதாக ஓராண்டு காலமாக தகவல்கள் பரவி வந்தது, இந்நிலையில், சிங்கள வாலிபரை ஒரு கும்பல் தாக்கி கொன்றதற்கு பழிவாங்கும் வகையில் கடந்த 4-ம் தேதி கண்டி மாவட்டத்துக்குட்பட்ட டெல்டெனியா பகுதி அருகே ஒருவரின் கடையை மாற்று மதத்தினர் சமீபத்தில் தீவைத்து எரித்தனர்.

இதனால், கடந்த இருநாட்களாக கண்டி மாவட்டம் மற்றும் அதன் அருகாமையில் உள்ள பகுதியில் புத்த மதத்தினருக்கும் இஸ்லாமியர் என இருதரப்பினருக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். பொதுச் சொத்துகளுக்கும் சேதம் ஏற்பட்டது.

இதையடுத்து, தலைநகர் கொழும்புவில் இருந்து சுமார் 160 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அப்பகுதிக்கு ஏராளமான போலீசாரும் துணை ராணுவ படையினரும் அனுப்பி வைக்கப்பட்டனர். கலவரத்தை கட்டுப்படுத்த தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டு ஆகியவை பிரயோகிக்கப்பட்டன. நிலைமை விபரீதம் ஆவதை தடுக்கும் வகையில் நேற்று மாலை 3 மணியளவில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த வன்முறை சம்பவங்கள் நாட்டின் பிறபகுதிகளுக்கு பரவுவதை தடுக்கும் வகையில் நேற்றிலிருந்து பத்து நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அவசரநிலை பிரகடனத்தில் உள்ள நிலையிலும் சிறுபான்மையினர் வழிபாட்டு தலங்கள் மீது புத்த மதத்தவர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். நேற்றிரவில் இருந்து இன்று அதிகாலைவரை கண்டி உள்ளிட்ட பகுதிகளில் சிறுபான்மையினத்தவர்கள் தாக்கப்படுவதும், பல்வேறு வழிபாட்டு தலங்கள் தீயிட்டு கொளுத்தப்படுவதும், சேதப்படுத்தப்படுவதும் உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த தாக்குதல் தொடர்பான புகைப்படங்களையும், தகவல்களையும் சமூக வலைத்தளங்கள் மூலம் பிறர் பரப்பாமல் இருக்க கண்டி மாவட்டம் முழுவதும் கைபேசி இன்டர்நெட் சேவைகளை அரசு முடக்கி உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top