டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டனாக கவுதம் காம்பீர் – அணியின் சிஇஒ ஹேமந்த் துவா அறிவிப்பு

11-வது ஐபிஎல் சீசன் அடுத்த மாதம் தொடங்குகிறது. தடைசெய்வயப்பட்ட சென்னை அணி இந்த சீசனில் பங்கேற்பதால் இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டி பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டனாக இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். ‘கவுதம் கம்பீரை கேப்டனாக நியமிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அவர் மீண்டும் டெல்லி அணியின் கேப்டனாக விளையாட உள்ளார்’ என்று அணியின் சிஇஒ ஹேமந்த் துவா தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

2008 முதல் 2010 வரை கவுதம் காம்பீர் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடி வந்தார் பின், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு மாறினார்.

கவுதம் காம்பீர் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி கேப்டனாக 2011-ம் ஆண்டில் இருந்து 7 ஆண்டுகள் விளையாடி உள்ளார். ஆனால் இந்த ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அவரை தக்க வைக்கவில்லை.

அதற்கு பதிலாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ரஸல் மற்றும் சுனில் நரைன் ஆகியோரை தக்க வைத்தது. தன்னை தக்க வைத்துக் கொள்ளவில்லை என்பதால், ஏலத்தின்போது தன்னை ஏலம் கேட்க வேண்டாம் என்றும், ரைட் டூ மேட்ச் கார்டு மூலம் தன்னை தக்க வைத்துக் கொள்ள வேண்டாம் என்றார் என்றும் நிர்வாகத்திடம் கூறிவிட்டார். இதனால் டெல்லி அணி 2.8 கோடி ரூபாய் கொடுத்து காம்பீரை வாங்கியது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top