செல்வராகவன்-சூர்யா புதிய படம் ‘என்.ஜி.கே’வுக்கு விளக்கம் இதுவா?

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகிவரும் படத்திற்கு ‘என்.ஜி.கே’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

`தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை தொடர்ந்து சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் 36-வது படமாக உருவாகும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் பிரீத்திசிங் நடிக்கிறார்கள்.

பிரபல தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு வில்லனாக நடிக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய, ஜி.கே.பிரசன்னா எடிட் செய்கிறார். இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இயக்குனர் செல்வராகவன் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று வெளியானது. த்ரில்லர் படமாக உருவாகும் இந்த படத்திற்கு `என்ஜிகே’ என்று தலைப்பு வைத்துள்ளனர். படத்தின் தலைப்பு வெளியானது முதலே `என்ஜிகே’-வின் விரிவாக்கம் என்ன என்பது குறித்து சமூக வலைதளங்களில் பலர் அரவத்துடன் கேள்விகளை எழுப்பினர்.

இந்நிலையில், அதற்கான விளக்கம் ‘நந்த கோபாலன் குமரன்’ என்று கூறுகின்றனர். படத்தில் சூர்யாவின் பெயர்தான் இது என்கிறார்கள்.

சென்னை, தஞ்சாவூர் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக பிரம்மாண்ட செட் ஒன்றுஅமைக்கப்பட்டு வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிவரும் இந்தப் படம், தீபாவளிக்கு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை, ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் வெளியிடுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top