சென்னை அப்போலோ மருத்துவமனையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் அனுமதி

 

உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

இது குறித்து திருவனந்தப்புரத்தில் உள்ள  முதல்வர் அலுவலகம் இதை உறுதி செய்துள்ளது. மேலும், கேரளாவில் இருந்து வெளியாகும் மலையாள நாளேடும் செய்தி வெளியிட்டுள்ளது.

 

திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்ட கேரள முதல்வர் பினராயி விஜயன், அவரின் மனைவி உள்ளிட்ட சிலர் சனிக்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு மேல் சென்னை வந்தனர். கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் வழக்கமான உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார் என்று முதல்வர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்று வழக்கமான உடல் பரிசோதனைகள் முடிந்தபின் நாளை திருவனந்தபுரம் புறப்பட்டுச் செல்வார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

 

சமீபத்தில் கேரள மாநிலம் அட்டபாடி அருகே அரிசி திருடியதாக அடித்துக் கொல்லப்பட்ட பழங்குடியின இளைஞர் மதுவின் வீட்டுக்கு 72 வயதான பினராயி விஜயன் நேற்று சென்று ஆறுதல் கூறினார். அவரை கொலை செய்தவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, சட்டத்தின் படி தண்டனை பெற்றுத் தரப்படும் என்று உறுதியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அந்த இளைஞரின் குடும்பத்துக்கு அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிதி உதவியும் அளித்தார்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top