தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12-ம் வகுப்பு பொதுதேர்வு இன்று தொடங்கியது


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத் தேர்வு இன்று தொடங்கியது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 66,934 பள்ளி மாணவ-மாணவிகளும் 40,686 தனித்தேர்வர்களும் தேர்வெழுதுகிறார்கள். இதற்காக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2,794 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேர்வு மையங்களில் தரைதளத்தில் தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மேலும், 103 சிறைவாசிகளுக்காக சென்னை புழல் மத்திய சிறையில் ஒரு தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத் தேர்வு எழுத்தும் பள்ளி மாணவர்களில்
அறிவியல் பாடப்பிரிவின் கீழ் 5 லட்சத்து 47,664 மாணவர்களும்
வணிகவியல் பிரிவின் கீழ் 2 லட்சத்து 42,290 மாணவர்களும்
கலை பிரிவின்கீழ் 14,228 மாணவர்களும்.
தொழிற்கல்வி பிரிவின் கீழ் 62,752 மாணவர்களும் தேர்வு எழுதுகின்றனர்.

தமிழ்வழியில் படித்து தேர்வு எழுதும் 5 லட்சத்து 32,243 பேருக்கு தேர்வு கட்டணம் செலுத்துவதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வுப் பணியில் 95 ஆயிரம் ஆசிரியர்கள், ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். தேர்வுக்கூடத்தில் மாணவர்கள் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுவதை தடுக்க 4 ஆயிரம் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மாநிலம் முழுவதும் வினாத்தாள்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள 296 கட்டுக்காப்பு மையங்களில் 24 மணி நேரமும் ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், தேர்வு நாட்களில் அனைத்து தேர்வு மையங்களிலும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

முதல் நாளான இன்று தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களில் முதல்நாள் தேர்வு நடந்தது. தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கியது. முதல் 10 நிமிடம் வினாத்தாள்களை படித்து பார்ப்பதற்கும், அடுத்த 5 நிமிடம் விடைத்தாளில் உள்ள விவரங்களை சரிபார்ப்பதற்கும் அனுமதிக்கப்பட்டது. மதியம் 1.15 மணிக்கு தேர்வு முடிவடைகிறது.

பிளஸ்-2 தேர்வு ஏப்ரல் மாதம் 6-ந் தேதி முடி வடைகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top