தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிராக தொடர்ந்து 17-வது நாளாக கிராமமக்கள் போராட்டம்;

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும், சிப்காட் வளாகத்தில் அமைய உள்ள 2-வது ஆலைக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கக்கூடாது என்பதனை வலியுறுத்தி கடந்த 17 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அங்கிருந்து வெளியேறும் புகையினால் மாசு ஏற்படுவதாகவும், அந்த புகையில் நச்சுத்தன்மை இருப்பதாகவும் குமார ரெட்டியார்புரம் கிராம மக்கள் புகார் தெரிவித்து வந்தனர். எனவே அந்த நிறுவனத்திற்கு தடை விதிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் பலமுறை மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தனர்.

ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் சிப்காட் வளாகத்தில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் விரிவாக்கப்பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்தது. இதுபற்றி அறிந்த குமாரரெட்டியார்புரம் கிராமமக்கள் விரிவாக்கப் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 17 நாட்களாக தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலை அமைத்திடம் பொழுது இதனால் ஏற்பட கூடிய அழிவுகள் ஆபத்துகள் பற்றி எங்களிடம் அரசு கூறவில்லை என்று மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த ஆலை அமைக்கப்பட்டால் அந்த ஊரு மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக அரசு தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது. ஆனால் இன்று வரை அவர்களில் யாருக்குமே வேலை வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். தற்போது போராடி வரும் மக்கள் எங்களுக்கு வேலை வேண்டாம் இந்த ஸ்டெர்லைட் ஆலை இங்கு இருந்து அகற்றப்பட வேண்டும் என்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top