காஞ்சி சங்கர மடம்- பீடாதிபதி ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கடந்து வந்த பாதை

 

 

பல மர்மங்களும் சிக்கலும் நிறைந்த இடம் காஞ்சீபுரத்தில் உள்ள காஞ்சி சங்கர மடம்.  இந்த மடத்தில் 69-வது பீடாதிபதியாக ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி அவர்கள் இருந்தார். கடந்த 1994-ம் ஆண்டு பெரிய சங்கராச்சாரியார்  இறந்த பிறகு மடாதிபதி பொறுப்பேற்று செயல்பட்டு வந்தார்.

 

காஞ்சீபுரத்தில் உள்ள ஆலயங்களுக்கு வரும் பக்தர்கள் காஞ்சி சங்கர மடத்திற்கும் செல்வது வழக்கம்,ஆகையால் இந்த மடத்திற்கு பக்தர்களின் வருகையும், பணமும் அதிகரித்து செல்வாக்கு நிறைந்த மடமாகி விட்டது.இங்கு வரும் பக்தர்களுக்கு  சங்கராச்சாரி என்று அழைக்கப்படுகிற  ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி அவர்கள் காஞ்சி மடத்தில் உள்ள தனது அறையில் அமர்ந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருவது வழக்கம் . உயர் பதவியில் இருப்பவர்களும்,பிரதமர் ,ஜனாதிபதி என செல்வாக்கு நிறைந்தவர்களும் இங்கு வந்து செல்வதால் இந்த மடம் அரசியல் செல்வாக்கு பெற்றது

சில மாதங்களாக  ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி அவர்களுக்கு   உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதற்காக அவர் சிகிச்சையும்  பெற்று வந்தார்.  இந்த நிலையில் இன்று காலை 8.10 மணிக்கு அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவரை அருகில் உள்ள ஏ.பி.சி.டி. மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். அப்போது எதிர் பாராத விதமாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

 

டாக்டர்கள் கொண்ட குழு ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமியை காப்பாற்ற தீவிரமாக போராடியது. ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை. 9.10 மணிக்கு காஞ்சி சங்கராச் சாரியார் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காலமானார்.

 

9.15 மணிக்கு ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் உடல் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சி மடத்திற்கு எடுத்து வரப்பட்டது. 9.20-க்கு காஞ்சி மடத்திற்குள் கொண்டு செல்லப்பட்டு மட நிர்வாகிகளால் அஞ்சலிக்காக தயார் செய்யப்பட்டது.

அவரது உடல் அடக்கம் நாளை நடைபெறும் என்று தெரியவந்துள்ளது.

 

மடத்தில் உள்ள ஒரு இடத்தில் அவரது உடலை அடக்கம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. பக்தர்கள் இறுதி மரியாதை செலுத்துவதற்காக மடத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

ஜெயேந்திரரின் மறைவை தொடர்ந்து காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் நடை அடைக்கப்பட்டது.

 

காலமான ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி அவர்களுக்கு வயது 83.  காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி 1935ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி பிறந்தார். ஜெயேந்திர சரஸ்வதியின் இயற்பெயர் சுப்பிரமணியம் மகாதேவ் ஜயர். இவர் தனது 19 வயதில் 1954ம் ஆண்டு மார்ச் 22-இல் காஞ்சி சங்கரமடத்தின் இளைய பீடாதிபதியானார். 1994ல் காஞ்சி மடத்தின் 69-வது பீடாதிபதியாக பதவியேற்றுக்கொண்டார். புரோகிதத் தன்மை, மற்றும் அரசியல் செல்வாக்கு இவரை இந்து சமயத்தினரிடையே பிரபலமாக்கியது தனிப்பட்ட முறையில் அரசியல்வாதிகளுடன் நெருக்கம் காட்டியதால் சர்ச்சைக்குள் சிக்கினார்.

காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் கடந்த 2004ம் ஆண்டு நவம்பர் 11-ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார்.

 

காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி கைது செய்யப்பட்டபிறகுதான் அவருடைய அரசியல் நண்பர்கள் யார் யார் என்றும்  மற்றும் பல பெண்களுடன் நெருக்கமாக இருந்த விசயங்களும் பொதுவெளிக்கு வர ஆரம்பித்தது.மறைந்த பெண் எழுத்தாளர் அனுராத ரமணன் தன்னிடம் தவறாக நடக்க முயற்சித்தார் என  இவர் குறித்து வெளிப்படையாகவே   பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்தார்.

பின்னர்-2005ம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஜெயேந்திரரை புதுச்சேரி சிறப்பு நீதிமன்றம் 2013ஆம் ஆண்டு விடுவித்தது.   இவர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு  தற்போது மடத்தின் பால பீடாதிபதியாக இருக்கும் விஜயேந்தரர் மீதும் உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது

 

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top