முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் சென்னையில் கைது

 

ஐஎன்எக்ஸ் மீடியா மோசடி பணப் பரிவர்த்தனை புகாரில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தின் மகன், கார்த்தி சிதம்பரம் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார்

 

ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்திற்கு விதிகளை மீறி அந்நிய முதலீடுகளை பெற்று தந்த வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டது.

 

இதனை தொடர்ந்து இந்த வழக்கினை விசாரித்து வந்த சி.பி.ஐ. கடந்த சில நாட்களுக்கு முன் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனை கைது செய்தது.

 

இந்த நிலையில், நீதிமன்ற அனுமதியுடன் லண்டன் சென்று விட்டு இன்று காலை சென்னை திரும்பிய கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டு உள்ளார்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top