ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: லண்டனில் இருந்து திரும்பிய கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது

மும்பையைச் சேர்ந்த இந்திராணி முகர்ஜி, அவரது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோர் நடத்தி வந்த ‘ஐஎன்எக்ஸ் மீடியா’ என்ற தொலைக்காட்சி நிறுவனம், 2007-ம் ஆண்டு விதிமுறைகளை மீறி ரூ.305 கோடிக்கு தனது பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்றுள்ளது. இதற்கு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் தடையில்லா சான்றிதழ் வாங்குவதற்காக கார்த்தி சிதம்பரம் உதவி செய்ததாகவும் இதில், கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனங்களுக்கு மொரீஷியஸ் நாட்டில் இருந்து பணம் வந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

2007-ம் ஆண்டு ஐஎன்எக்ஸ் மீடியா மோசடி பண பரிவர்த்தனை புகாரில் கார்த்தி சிதம்பரம் சிக்கிய பொது அவரின் தனத்தை ப.சிதம்பரம் மந்திய நிதி மந்திரியாக இருந்தார்

இது தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையடுத்து கடந்த ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி கார்த்தி சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். கார்த்தி சிதம்பரத்தின் மீது 5 பிரிவுகளில் வழக்கும் பதிவு செய்தனர்.

அமலாக்கத் துறை பதிவு செய்துள்ள வழக்கு குறித்து விசாரணை நடத்துவதற்காகவும், வாக்குமூலம் பதிவு செய்வதற்காகவும் ஜனவரி 11, 16 ஆகிய தேதிகளில் நேரில் ஆஜராக வேண்டும் என கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அவர் ஆஜராகவில்லை.

டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் கடந்த மாதம் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். மீண்டும் மார்ச் 1-ம் தேதி ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

இந்த சம்மனுக்கு தடை விதிக்கக்கோரி கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. அதன்பின்னர் முன்ஜாமீன் வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மார்ச் 6-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் லண்டன் சென்றிருந்த கார்த்தி சிதம்பரம் இன்று அதிகாலை சென்னை திரும்பினார். அப்போது விமான நிலையத்தில் அவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். சிபிஐ அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரை இன்று மாலை டெல்லிக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top