தலித் குடும்பத்தின் மீது சாதிய வன்முறை, சிறுவன் கொலை; விடுதலை சிறுத்தை-மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்

விழுப்புரம் மாவட்டம் வேலாம்புதூர் கிராமத்தில் நிலப்பிரச்சினை தொடர்பாக சாதிய சமூகத்தை சேர்ந்த கும்பல் தலித் சிறுவனை படுகொலை செய்துள்ளது.மேலும் அச்சிறுவனின் தாய் மற்றும் சகோதரி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார் அவர் கூறியதாவது:-

தலித்துகள் மீது தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் இதுபோன்ற செயல்களை அரசு வேடிக்கை பார்க்கிறது. ஈவு இறக்கமற்ற செயலில் ஈடுபட்ட அந்த கும்பலை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹருல்லா கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது:-

கடந்த 22-ந்தேதி அன்று இரவு தலித் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களின் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது, சமூக விரோதிகள் திடீரென்று வீட்டுக்குள் புகுந்து 3 பேரையும் பயங்கர ஆயுதங்களால் சரமாரியாகத் தாக்கியதுடன், அங்கிருந்த சிறுமி மற்றும் அவரது விதவைத் தாயை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது காட்டுமிராண்டித் தனமாகும்.

இந்த மனித நேயமற்ற செயலை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. மனிதாபிமானமற்ற சம்பவத்தில் ஈடுபட்டோரை உடனடியாக கைது செய்யக் கோரி நாளை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விழுப்புரத்தில் நடைபெறும் மாபெரும் மறியல் போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி பங்குகொள்ளும் என தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top