தமிழர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த இலங்கை ராணுவ அதிகாரி; விசாரணை நடத்த வலியுறுத்தி தமிழர்கள் போராட்டம்

இலங்கையின் 70-வது ஆண்டு சுதந்திர தினக் கொண்டாட்டம், பிரிட்டனில் உள்ள அந்நாட்டு தூதரகத்தில் கடந்த பிப்.4-ம் தேதி நடைபெற்றது. அப்போது, 2009-ல் ஒன்றரை லட்சம் தமிழர்கள் இளநகை அரசால் இனப்படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, பிரிட்டனில் வசிக்கும் ஈழத் தமிழர்கள் பலர், தூதரகம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த இலங்கை தூதரக ராணுவ பாதுகாப்பு ஆலோசகர் பிரியங்க பெர்னாண்டோ, தமிழர்களை பார்த்து ‘கழுத்தை அறுத்து விடுவேன்’ என்ற சைகை காட்டினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தூதரக அதிகாரிகளுடன் இலங்கை தமிழர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவர்கள் வலியுறுத்தினர்.

இதனிடையே, ராணுவ அதிகாரி பிரியங்க பெர்னாண்டோ சைகை காண்பித்த விடியோ, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இதனைத் தொடர்ந்து, அவரை பணி நீக்கம் செய்யக் கோரி பிரிட்டன் அரசுக்கு இலங்கை வம்சாவளி எம்பிக்கள் கடிதம் எழுதினர்.

தொடர்ந்து, ராணுவ அதிகாரி பிரியங்க பெர்னாண்டோவை பணியிடை நீக்கம் செய்து, இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சகம் உத்தரவிட்டதுடன் அவர் மீது துறைரீதியிலான விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவித்தது. ஆனால், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பிரியங்க பெர்னாண்டோவுக்கு இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவால் மீண்டும் பணி வழங்கப்பட்ட்டது.

பிரியங்க பெர்னாண்டோவுக்கு மீண்டும் பணி வாய்ப்பு அளிக்கப்பட்டது இலங்கை தமிழர்களையும், பிரிட்டனில் வாழும் தமிழர்களையும் அதிர்ச்சி அடையச் செய்தது. இதனால் பிரிட்டனில் உள்ள இலங்கை வம்சாவளி எம்பிக்களும், அங்குள்ள ஈழத் தமிழர்களும் பிரிட்டன் நீதிமன்றம் மூலம் பிரியங்க பெர்னாண்டோவை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர்.

இதனை அறிந்து கொண்ட பிரியங்க பெர்னாண்டோ பிரிட்டனில் இருந்து தப்பி விமானம் மூலம் 24-ம் தேதி இலங்கை வந்தடைந்தார். தற்போது இலங்கையில் உள்ள பிரியங்க பெர்னாண்டோ மீது அறிவித்தவாறு விசாரணை நடத்த வேண்டும் என இலங்கையில் உள்ள பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கை உள்நாட்டு யுத்தத்தின்போது ராணுவ அதிகாரி பிரியங்க பெர்னாண்டோ பல்வேறு போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர் என்ற குற்றச்சாட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையை நிகழ்த்திய இலங்கை அரசு, தொடர்ந்து சர்வதேச நாடுகள் முன் இனப்படுகொலையை மறுத்து அப்படி ஒரு செயலில் இலங்கை அரசு ஈடுபடவில்லை என்று கூறிவருகிறது. மேலும், போருக்கு பின்னர் தமிழர்கள் நிம்மதியாக வாழ்வதாக தெரிவித்து வரும் இலங்கை அரசு தற்போது பிரியங்க பெர்னாண்டோ பிரிட்டனில் தமிழர்களை கழுத்தை இருப்பேன் எனும் செய்கை தமிழர்களை இலங்கை அரசு எப்படி நடத்தி வருகிறது என்பது அம்பலமாகி இருக்கிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top