இந்திய அணிக்கு ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப் விருதை வழங்கியது

ஆண்டுதோறும் டெஸ்ட் தர வரிசையில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு ஐசிசி-யின் டெஸ்ட் சாம்பியன்ஷிப் விருது வழங்கப்பட்டு வருகிறது.

டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் இந்தியா ‘நம்பர்-1’ இடத்தில் உள்ளது. இந்த வகையில் இந்த ஆண்டு முதலிடம் பிடித்த இந்திய கிரிக்கெட் அணிக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப் விருதை நேற்றுமுன்தினம் கேப்டவுன் நகரில் வழங்கப்பட்டது.

ஐ.சி.சி. சார்பில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர், தென்ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் பொல்லாக் ஆகியோர் வழங்கினார்கள். இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஐ.சி.சி.யின் கடாயுதத்தை பெற்றுக் கொண்டார். மேலும் இந்திய அணிக்கு 10 லட்சம் அமெரிக்க டாலர் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது. 2-வது முறையாக இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் விருதை இந்தியா வென்றுள்ளது.

இதுகுறித்து விராட் கோலி கூறும்போது:-

விருது வென்றது மகிழ்ச்சியான விஷயம். டெஸ்ட் போட்டிகளில் நாங்கள் சிறப்பான முறையில் விளையாடி வருகிறோம் என்பதில் பெருமை கொள்கிறோம். அணி வீரர்கள் அனைவருமே சிறப்பான முறையில் செயல்படுகின்றனர் என்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top