அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் போராட்டத்துக்கு தடை விதிக்க மறுப்பு : சென்னை ஐகோர்ட்

புதிய பென்சன் திட்டம் தொழிலார்களுக்கு எதிராக உள்ளது. ஆதலால் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 21 மாத ஊதிய மாற்ற நிலுவை தொகை வழங்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ – ஜியோ சார்பில் 21-ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

தங்கள் கோரிக்கைகளை முன்னிறுத்தி போராடி வரும் அரசு ஊழியர்கள் மக்களுக்கு இடையூறாக போராட்டத்தை நடத்தி வருகின்றனர் என்றும் ஆதலால் அந்த போராட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம், போராட்டத்திற்கு தடை விதிக்க மறுத்ததுடன், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

அதேசமயம் போராட்டம் நடத்தும் ஆசிரியர்களுக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி “மக்களுக்கு இடையூறு இன்றி போராட்டம் நடத்துங்கள், தங்கள் அலுவலக வளாகம் மற்றும் தனியார் இடங்களில் போராட்டம் நடத்தினால் அதில் நீதிமன்றம் தலையிடாது” என்றார் தலைமை நீதிபதி அறிவுரைகள் வழங்கினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top