பப்புவா நியூ கினியாவில் 7.5 அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

தென்மேற்கு பசிபிக் பெருக்கடலில் அமைந்துள்ளநாடான பப்புவா நியூ கினியாவின் போர்கேரா மாகாணத்தில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவாகியது.

சுமார் 90 கிலோ மீட்டர் தொலைவில் கடலுக்கு அடியில் 35 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடி தகவல் ஏதும் இல்லை. உயிர் சேதங்கள் குறித்தான எந்த தகவலும் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.

இருப்பினும், எண்ணெய் வளம் கொண்ட பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் துரப்பன பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஹைட்ஸ் என்ற எரிவாயு ஆலையில் உற்பத்தி நிறுத்தப்பட்டு ஊழியர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். ஆனால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கம் ஏற்பட்ட
பகுதிகளில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் சேத விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

பப்புவா நியூ கினியாவின் வடக்கு கரையோர பகுதியில் 1998-ல் ரிக்டர் அளவுகோலில் 7.0 பதிவான நிலநடுக்கத்தில் சுனாமி ஏற்பட்டது. சுனாமி தாக்கியதில் 2,200 மக்கள் உயிர் இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து நிலைமை கண்காணிக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top