உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மீதான வழக்குகள் அதிகரிப்பு; பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி காரணம்

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க அரசுகள் தான் மத்தியில் மாரி மாரி ஆட்சி செய்து வருகின்றன. மத்திய அரசு மீதான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் அதிகரித்துள்ளன. பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி அமலாக்கம், வரி சீர்திருத்தம் போன்ற காரணங்களால் வழக்குகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சட்டத் துறை அமைச்சக புள்ளிவிவரங்களில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரையில், மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 4,229 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

2004 – 2014ல் வரை மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த பொது, கடந்த 2012-ம் ஆண்டு மத்திய அரசின் மீது 4,149 வழக்குகள் இருந்தன, இந்த வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து 2013-ம் ஆண்டு 4,772 ஆக உயர்ந்தது. இதன் பின், 2014-ம் ஆண்டு மத்தியில் ஆட்சி மற்றம் நிகழ்ந்தது.

கடந்த 2014-ம் ஆண்டு பாஜக தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி மத்தியில் பொறுப்பேற்ற போது, மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 4,748 வழக்குகள் இருந்தன. ஆனால், 2015-ம் ஆண்டில் மொத்தம் 3,909 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன் பின் 2016-ம் ஆண்டு ஓராண்டில் 3,497 வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. தற்போது, 2017-ம் ஆண்டில் மட்டும் மத்திய அரசு மீது 4,229 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் பிப்ரவரி 22-ம் தேதி வரையில் மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 859 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இவ்வாறு சட்டத் துறை அமைச்சக புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது,

‘‘பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி வரி அமலாக்கம், மற்ற வரி சீர்திருத்தங்கள் போன்ற நடவடிக்கைகளால் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன’’ என்றனர். வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், மத்திய அரசு சார்பில் வழக்குகளை நடத்த வேண்டிய அதிகாரிகளின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது.

மேலும், சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகு புதிய சொலிசிட்டர் ஜெனரல் நியமிக்கப்படவில்லை.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளை நடத்தும் அதிகாரிகளின் எண்ணிக்கையை 10 ஆக உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top