நடிகை ஸ்ரீதேவி மரணம் : இன்று மாலை உடல் மும்பை கொண்டு வரப்படுவதாக தகவல்

தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

நடிகை ஸ்ரீதேவி திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக நேற்று முன்தினம் இரவு துபாய் சென்றார். இரவு 11 மணியளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்தது என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

உயிர் பிரிந்த நிலையில்தான் ஸ்ரீதேவியின் உடல் துபாயில் உள்ள ரஷித் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. தற்போது ஸ்ரீதேவியின் உடல் அல் குவாசிஸ் பகுதியில் உள்ள காவல்துறை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடல் தடயவியில் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனை குறித்த முழு அறிக்கை தயாராகாததால், ஸ்ரீதேவியின் உடலை இந்தியா கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக துபாய் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

இந்நிலையில், பரிதேச பரிதசாதனை முடிந்து இன்று மாலைக்குள் ஸ்ரீதேவியின் உடல் இந்தியா கொண்டுவரப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதற்காக அம்பானிக்கு சொந்தமான தனி விமானம் ஒன்று துபாய் விரைந்துள்ளது.

இந்தியா கொண்டுவரப்படும் ஸ்ரீதேவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. பின்னர் உடலை நாளை தகனம் செய்ய ஸ்ரீதேவி வீட்டார் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஸ்ரீதேவியின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்தி, லதா ரஜினிகாந்த், இயக்குநர் பாரதிராஜா, நடிகை ஹன்சிகா விமானம் மூலம் மும்பை விரைந்துள்ளனர். கலைத்துறையை சேர்ந்த மேலும் பலர் மும்பை செல்லவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், அவரின் ரசிகர்களும் அஞ்சலி செலுத்த மும்பை விரைந்துள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top