நெல்லை காவல்துறையினர் மீது நடவடிக்கையில் மெத்தனம்! வழக்கறிஞர் செம்மணி செய்தியாளர் சந்திப்பு

 

 

 

கடந்த 31-11-2017 அன்று நள்ளிரவு திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டம், பழவூர் மாறன்குளத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் செம்மணியை வள்ளியூர் டி.ஸ்.பி அழைத்ததாக கூறி பழவூர் காவல் உதவி ஆய்வாளர் விமல்குமார் ஆகியோர் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் வீடுபுகுந்து அவரை இழுத்து சென்றுள்ளனர். எந்த புகாரும் அவர் மீது கொடுக்கப்படவில்லை, மேலும் காவல் துறையிடம் கைது வாரண்ட் இல்லை என்பதை அறிந்த வழக்கறிஞர் செம்மணி வர மறுத்துள்ளார். வர மறுத்த அவரை இழிவாக திட்டியும் அடித்தும் எழுத்து சென்றனர் காவல் துறையினர்.

 

வழக்கறிஞர் செம்மணி தொடர்ந்து கூடங்குளம் போராட்ட வழக்குகளை நடத்தி வருபவர். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து இருபதாண்டுகளுக்கு மேலாக போராடி வருபவர்.

 

வழக்கறிஞர் செம்மணி காவலர்களால் அத்துமீறி சிறைபிடிக்கப்பட்டத்தை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினர். இதை தொடர்ந்து 8-11-2017 அன்று திருநெல்வேலி டி.ஐ.ஜி 5 காவலர்களை ஆயுதப்படைக்கு மாற்றி நடவடிக்கை எடுத்ததாக பத்திரிகையாளர்களிடம் அறிவித்தார்.

 

12-11-2017-ல் நெல்லை வர இருந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கருப்பு கொடி காட்டப்படும் என்று நெல்லை உள்ளிட்ட 9 மாவட்ட வழக்கறிஞர் சங்கங்கள் அறிவித்தன. அப்போது வழக்கறிஞர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய டி.ஐ.ஜி 8 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் வழக்கறிஞர்கள் புகார்தாரத 2 பெரும் உள்ளனர் என்று அறிவித்தனர்.

 

ஆனால் முக்கிய குற்றவாளியான பழவூர் உதவி ஆய்வாளர் விமல்குமார், முகமது சம்சீர், டி.எஸ்.பி குமார் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

 

வழக்கறிஞர் செம்மணியை தாக்கிய காவல் துறையினர் மீது சரியான நடவடிக்கை எடுக்காததால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் அவர் கூறியதாவது:-

 

1. குற்றவாளிகள் காவற்துறையினர் அனைவரையும் (ஆர்.டி.ஓ) கோட்டாட்சியர் விசாரணை முடியும்வரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.

 

2. சேரன்மகாதேவி கோட்டாட்சியர் விசாரணை நேர்மையாக நடைபெற அங்கு ஆய்வாளராக பனி அமர்த்தப்பட்டுள்ள ஆய்வாளர் ஸ்டிபன் ஜோசை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து கைதுசெய்ய வேண்டும்.

 

3. குற்றவாளிகள் மீது காவல்துறை வன்கொடுமை தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

4. பாதிக்கப்பட்ட வழக்கறிஞர் செம்மணி மற்றும் அவரது துணைவியார் சரோஜா ஆகியோருக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதன் பிறகும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் நெல்லை காவல் நிலையம் முன்பு போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக மக்கள் முன்னணி (கூட்டமைப்பு) தெரிவித்தனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top