நாளை இந்தியா- தென்ஆப்பிரிக்கா மோதும் கடைசி 20 ஓவர் போட்டி; வெல்லப்போவது யார்?

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த இந்தியா அதற்கு பதில் அடி கொடுக்கும் வகையில் ஒருநாள் போட்டி தொடரில் சிறப்பாக விளையாடி 5-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

பின், இரு அணிகள் மோதும் மூன்று ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் முதல் ஆட்டத்தில் இந்தியாவும், 2-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றது. 1-1 என்னும் கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளது.

தொடரை வெல்வது யார் என்பதை தீர்மானிக்கும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி நாளை கேப்டவுனில் நடக்கிறது.

பேட்டிங்கில் இந்திய அணி ஷிகர் தவான், கோலி, மனீஷ் பாண்டே, டோனி ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். தொடக்க வீரர் ரோகித் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். பந்து வீச்சில் புவனேஸ்வர்குமார், ஜெய்தேவ் உனட்கட், பும்ரா, பாண்ட்யா, சாஹல் ஆகியோர் உள்ளனர்.

கடந்த ஆட்டத்தின் பொது வானிலையில் மாற்றங்கள் ஏற்பட்டதால், கற்று வீசும் திசையில் மாறுதல்கள் நடந்தது. இந்த வானிலை மற்றம் தென் ஆப்பிரிக்கா அணிக்கு சாதகமாக அமைந்தது. இந்திய வேகப்பந்து வீச்சளர்களுக்கு பின்னடைவு ஏற்பட்டது.

கடந்த போட்டியில் சாஹல் பந்து வீச்சை தென்ஆப்பிரிக்க வீரர்கள் நாலாபுறமும் சிதறடித்தனர். அவர் 4 ஓவரில் 64 ரன் விட்டு கொடுத்தார். இதனால் சாஹல் சிறப்பாக பந்து வீசுவது அவசியமாகும். ஒருநாள் போட்டி தொடரையும் கைப்பற்றும் முனைப்பில் இந்தியா இருக்கிறது.

தென்ஆப்பிரிக்கா அணியில் ஹென்டிரிக்ஸ், சுமட்ஸ், டுமினி, கிளாசென், டேவிட் மில்லர் ஆகிய வீரர்கள் உள்ளனர். குறிப்பாக விக்கெட் கீப்பர் கிளாசென் சிறப்பாக விளையாடி வருகிறார்.

பந்து வீச்சில் கிறிஸ்மோரிஸ், டாலா, பேட்டக்சன் ஆகியோர் உள்ளனர். இரு அணிகளும் சமபலத்துடன் இருப்பதால் கடைசி போட்டி விறுவிறுப்பாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மேலும் ஒருநாள் தொடரை இழந்ததற்கு இந்தியாவிற்கு பதில் அடி கொடுக்கும் முனைப்புடன் தென் ஆப்பிரிக்கா அணி விளையாடும் என்பதால் இந்த போட்டி மேலும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

வெற்றிக்காக இரு அணிகளும் போராடும் என்பதால் நாளைய போட்டி விறு விறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போட்டி இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு தொடங்குகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top