வட சென்னை படப்பிடிப்பு நிறைவு – விரைவில் திரைக்கு வருகிறது படக்குழு தகவல்

`விசாரணை’ சர்வதேச திரைப்பட போட்டிகளில் கலந்து கொண்டு பல விருதுகளை வென்ற படம். இந்த படத்திற்காக இயக்குனர் வெற்றி மாறன் உலகம் முழுவதும் பாராட்டப்பட்டார்.

விசாரணைக்கு படத்திற்கு பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் `வட சென்னை’. தனுஷ் இந்த படத்தின் கதாநாயகனாக நடித்து வருகிறார். மேலும், இந்த படத்தை தனுஷ் அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் இந்த படத்தை வெளியிடுகிறது.

`வட சென்னை’ படத்தின் படப்பிடிப்பு நீண்டகாலமாக நடந்து வந்த நிலையில் இது குறித்தான எந்த அறிவிப்பும் இல்லது இருந்தது, பின் இந்த படம் மூன்று பாகங்களாக வெளிவர உள்ளது என்று படக்குழு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது.

மூன்று பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் முதல் பாகத்திற்கான படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாக அந்த படத்தில் முக்கியான பாத்திரத்தில் நடிக்கும் சமுத்திர கனி தெரிவித்துள்ளார்.

தனுஷ் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் – ஆண்ட்ரியா நாயகிகளாக நடிக்கின்றனர். இயக்குநர் அமீர், சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ், பவான், சுப்ரமணியன் சிவா, சீனு மோகன், டேனியல் அனி போப் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

`பொல்லாதவன்’, `ஆடுகளம்’ படத்திற்கு பிறகு தனுஷ் – வெற்றிமாறன் மீண்டும் இணைந்து இருப்பதாலும், விஷசுரனை படம் ஏற்படுத்திய தாக்கமும் கலந்து இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top