ஆசிரியர்களுக்கு துப்பாக்கி வழங்கப்படும்: ட்ரம்ப் பேச்சல் மீண்டும் சர்ச்சை

அமெரிக்காவின் புளோரிடாவில் கடந்த சில நாட்களுக்கு முன் மார்ஜரி ஸ்டோன்மேன் டக்ளஸ் உயர்நிலை பள்ளியில் முன்னாள் மாணவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பள்ளி மாணவர்கள் உட்பட 17 பேர் கொல்லப்பட்டனர். . துப்பாக்கிச் சூடு நடத்திய பள்ளியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் மாணவனைப் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

அமெரிக்கா முழுவதும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவின் சந்தைகள், வணிக வளாகங்கள் மற்றும் பள்ளிகளில் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. அமெரிக்காவில் துப்பாக்கி எளிதில் கடைக்கும் வகையில் அந்த அரசு செயல் முறை படுத்தி இருக்கிறது. மேலும் துப்பாக்கி சூடு சம்பவங்களை தவிர்ப்பதற்கு அமெரிக்கா அரசு இதுவரை எந்த முயற்சியும் எடுக்காத நிலையில் கடந்த வாரம் மீண்டும் ஒரு பள்ளியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் அரசு மீது கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், பள்ளிகளில் அடிக்கடி துப்பாக்கி சூடு சம்பவம் நடப்பதைக் கண்டித்து பெற்றோர்கள், மாணவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், துப்பாக்கிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் கொண்டு வர வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

தொடர்ந்து அமெரிக்காவில் போராட்டங்கள் வலுத்து வர, சாதாரண தானியங்கி துப்பாக்கியை எந்திர துப்பாக்கியாக மாற்றக்கூடிய “பம்ப்ஸ்டாக்” என்ற கருவியை பயன்படுத்த டிரம்ப் தடை விதித்துள்ளார்.

இந்த நிலையில் பள்ளி துப்பாக்கி சூடு சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களை டிரம்ப் வெள்ளை மாளிகைக்கு அழைத்து பேசினார். அதில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் துப்பாக்கி சூட்டில் பலியான மாணவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது அவர்களிடம் பேசிய டிரம்ப் “இனி துப்பாக்கி வாங்குபவர்கள் பின்னணி பற்றியும் தீவிரமாக விசாரிக்கப்படும். அவர்களுடைய மனநிலைப் பள்ளி ஆய்வு செய்யப்படும் என்றும் அவர்களிடம் டிரம்ப் கூறினார்.

தொடர்ந்து பேசிய டிரம்ப் பள்ளிகளில் துப்பாக்கி சூடு சம்பவம் நடக்காமல் இருக்க இனி ஆசிரியர்கள் துப்பாக்கி வைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

இதுகுறித்து ட்ரம்ப் கூறும்போது, “நீங்கள் துப்பாக்கி வைத்திருக்கும் திறமையான ஆசிரியராக இருந்தால் உங்களால் தாக்குதலை விரைவாக தடுக்க முடியும். பள்ளிகளில் 20% ஆசிரியர்கள் துப்பாக்கிச் சுடுதலில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். துப்பாக்கியை திறமையாக கையாளும் நபர்களுக்கு மட்டுமே நான் கூறுவது பொருந்தும்” என்றார்.

ட்ரம்பின் இந்த கருத்து தற்போது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரின் பேச்சு இப்பொது அமெரிக்காவில் சர்ச்சையாக மாறி உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top