தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டி-20 போட்டி இந்தியா தோல்வி; தோல்வி குறித்து கோலி விளக்கம்

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 டெஸ்ட் கொண்ட தொடரை தென்ஆப்பிரிக்கா 2-1 என்ற கணக்கிலும், 6 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 5-1 என்ற கணக்கிலும் கைப்பற்றியது.

இதை தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஜோகன்ஸ்பர்க்கில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 28 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், இந்த இரு அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி செஞ்சூரியனில் இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 188 ரன் குவித்தது. மணிஷ் பாண்டேவும் தோனியும் பொறுப்புடனும், அதிரடியாகவும் ஆடி அணியின் எண்ணிக்கையை மளமளவென உயர்த்தினார். மணீஷ் பாண்டே 48 பந்துகளில் 3 சிக்சர், 6 பவுண்டரியுடன் 79 ரனனுடனும், தோனி 28 பந்துகளில் 3 சிக்சர், 4 பவுண்டரியுடன் 52 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

பின்னர் விளையாடிய தென்ஆப்பிரிக்கா 18.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தென் ஆப்ரிக்கா அணி சார்பில் ஜூனியர் டாலா 2 விக்கெட்டும், டுமினி, பெலுகோவோயா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்ரிக்கா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஹென்ரிக்ஸ்,ஸ்மட்ஸ் ஆகியோர் விளையாடினர்.

தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்கள் ஸ்மட்ஸ் மற்றும் ஹென்ரிக்ஸ் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதன் பின் ஜோடி சேர்ந்த கிளாசன் – டுமினி 93 ரன்கள் சேர்த்தது. கேப்டன் டுமினி நிதானமாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.

இறுதியில், அந்த அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் டுமினி 40 பந்துகளில் 3 சிக்சர், 4 பவுண்டரியுடன் 64 ரன்களுடனும், பெஹார்டியன் 10 பந்துகளில் ஒரு சிக்சருடன் 16 ரன்களுடனும் அவுட்டாகாமல் இருந்தனர்.

இந்திய அணியின் சார்பில் உனத்கட் 2 விக்கெட்டும், ஷர்துல் தாகுர் மற்றும் ஹர்திக் பாண்ட்யா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-

188 ரன் என்பது நல்ல ஸ்கோர் தான். வெற்றி பெறுவதற்கான ரன்னாகவே நினைக்கிறேன்.

ஆனால் வானிலை தான் பந்துவீச்சாளர்களுக்கு கடினமான சூழ்நிலையை ஏற்படுத்தி விட்டது. 12-வது ஒவர் வரை நன்றாகவே இருந்தது. அதன்பிறகு மழை தூறலால் மோசமாக மாறியது. பந்துவீச்சாளர்களுக்கு ஆடுகளத்தில் பந்து வீசுவது மிகவும் கடினமாக இருந்தது.

தென்ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன்கள் ஆடுகள தன்மையை பயன்படுத்தி சிறப்பாக ஆடினார்கள். கிளாசன், டுமினி பேட்டிங் மிகவும் சிறப்பாக இருந்தது. வெற்றிக்கு அவர்கள் தகுதியானவர்களே.

தென் ஆப்ரிக்காவின் இந்த வெற்றியின் மூலம் டி-20 தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளன. இந்த தொடரின் இறுதி போட்டி வரும் 24-ம் தேதி கேப்டவுனில் நடைபெறுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top