காவிரி விவகாரம் தொடர்பாக, தமிழக முதலமைச்சர் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்

காவிரி நதிநீர் பங்கிட்டு உரிமை பிரச்சினை தொடர்பான வழக்கில் கடந்த 16-ம் தேதி உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கியது. இதில், தமிழகத்துக்கு காவிரியில் இருந்து 177.25 டிஎம்சி நீர் வழங்க உத்தரவிடப்பட்டது. நடுவர் மன்றத்தின் தீர்ப்பில் கூறப்பட்ட 192 டிஎம்சியைவிட 14.75 டிஎம்சி தண்ணீர் குறைக்கப்பட்டது. இந்த 14.75 டிஎம்சி நீர் கர்நாடகாவுக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டது. மேலும், 6 வாரத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்குபடுத்தும் குழுவை அமைக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவுயிட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பால் தமிழக விவசாயிகள் மத்தியில் மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த தீர்ப்பினால் பல்லாயிரக்கனாக ஏக்கர் பாசன பகுதி பாதிக்கப்படும் இதை நம்பியுள்ள லட்சக்கணக்கா விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். அரசியல் கட்சிகளும் அதிருப்தி தெரிவித்தன. இந்த தீர்ப்பு குறித்து உடனடியாக தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டது.

இந்நிலையில், காவிரி பிரச்சினை தொடர்பாக ஆலோசிக்க திமுக சார்பில் பிப்.23-ம் தேதி அனைத்துக்கட்சிக் கூட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, பிப்.22-ம் தேதி அனைத்துக்கட்சிக் கூட்டம் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து அரசு சார்பிலேயே அனைத்துக் கட்சிக்கூட்டம் நடப்பதால் திமுக சார் பில் நடக்க இருந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ரத்து செய்வதாக திமுக தெரிவித்தது.

மேலும், இந்த அணைத்து கட்சி கூட்டத்தில் அரசியல் கட்சிகள், விவ சாய சங்கங்கள் என 44 அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன் படி இன்று அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது. இன்று காலை 10.30 மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது. முதல்வர் கே.பழனிசாமி தலைமையில் நடக் கும் இந்தக் கூட்டத்திற்கு கி.வீரமணி, சீமான், ஜவாஹிருல்லா, காதர் மொகிதீன், எல்.கே.சுதீஷ், கிருஷ்ணசாமி, தமிமுன் அன்சாரி, கொங்கு ஈஸ்வரன் உள்ளிட்டோர் தலைமை செயலகம் வருகை தந்துள்ளனர். அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், துரைக்கண்ணு, காமராஜ் உள்ளிட்டோர் வருகை தந்தனர்.

முன்னதாக வேளாண்துறை செயலாளர் ககன்தீப்சிங்பேடியுடன் விவசாய பிரதிநிதிகள் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

நாமக்கல் கவிஞர் மாளிகையில் காவிரி விவகாரம் தொடர்பாக, விவசாய சங்க பிரதிநிதிகளுடன், வேளாண்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி ஆலோசனையில் ஈடுபட்டார். பி.ஆர்.பாண்டியன், அய்யாக்கண்ணு, காவிரி தனபாலன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்

வேளாண்துறை செயலருடனான ஆலோசனைக்கு பிறகு அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top