கச்சத்தீவு விழாவிற்கு நாட்டுப் படகில் செல்ல அனுமதி; தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்

 

 

கச்சத்தீவு திருவிழாவிற்கு மோட்டார் பொருத்திய நாட்டுப்படகில் செல்வதற்கு அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பை ஒத்திவைத்தது.

 

ராமேஸ்வரம் மற்றும் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மீனவர்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்தனர். அதில், கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழாவிற்கு தமிழகத்தில் இருந்து மோட்டார் பொருத்திய நாட்டு படகில் செல்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

 

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், கச்சத்தீவு திருவிழா வழிபாட்டுக்கு செல்வதற்கான விதிமுறைகள் குறித்து ராமேஸ்வரம் வட்டாட்சியர், விழா ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் விளக்கம் தர உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

 

அதன்படி இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மீன்பிடி படகுகளில் கச்சத்தீவுக்கு செல்ல சட்டத்தில் அனுமதிக்கவில்லை என்று நீதிபதிகள் கூறினர்.

 

மேலும், படகில் செல்லும்போது அசம்பாவிதம் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டால் விபத்து இழப்பீடு வழங்க இயலாது என்றும் தெரிவித்த நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top