சிரியாவில் அரசுப்படை மக்கள் மீது கொடூர தாக்குதல் – 48 மணிநேரத்தில் 250 பேர் பலி;

சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக இதுவரை இல்லாத அளவிற்கு சிரியா அரசு படை விமான தாக்குதல், ராக்கெட் குண்டு தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

கடந்த 48 மணி நேரத்தில் சிரியாவின் கிழக்கு கௌடா மாகாணத்தில் சிரியா அரசு நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உள்ப்பட 250 பொதுமக்கள் கொல்லப்பட்டு உள்ளதாக போர் கண்கணிப்பு அறிக்கை தெரிவித்துள்ளது.

சிரியாவில் 2013ம் ஆண்டுக்கு பிறகு பெரிய அளவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அரசு படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் 48 மணிநேரத்தில் 250 கொல்லப்பட்டுள்ளனர். 1,200 பேர் காயமடைந்துள்ளனர். இதில், பாதிக்கும் மேற்பட்டவர்கள் 10 வயதுக்கும் குறைவானவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் பதவி விலகக் கோரி, கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் உள்நாட்டு கலவரம் மூண்டது. இதில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவும், சிரிய அரசுப் படைக்கு ஆதரவாக ரஷ்யா அவ்வப்போது வான்வழித் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த மோதலில் 400,000 பேர் பலியாகியுள்ளனர்.

கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சிரியா அரசு தாக்குதல் நடத்திவருகிறது. இந்நிலையில், கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான தாக்குதலை அரசு படைகள் தீவிரப்படுத்தியுள்ளன. டமாஸ்கஸ் நகருக்கு அருகில் உள்ள கிழக்கு கவுடா பகுதியில் அரசுப்படை விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன. நகரம், கிராமம் என கிளர்ச்சியாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதியை குறி வைத்து இந்த தாக்குதல் நடந்து வருகிறது. இதுமட்டுமின்றி ஏவுகணைகளை வீசியும் சில பகுதிகளில் தாக்குதல் நடத்தப்படுகிறது.

இந்த தாக்குதல் கிளர்ச்சியாளர்கள் மீது நடத்தப்படுவதாக கூறப்பட்டாலும் இதில் அதிகம் உயிர் இழந்தவர்கள் பொதுமக்களே. தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதலில் பொதுமக்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டு வருகின்றனர். மக்களை அந்த பகுதியில் இருந்து அரசு படை வெளியேற்றாமல் தொடர்தாக்குதலை நிகழ்த்தி வருகிறது சிரியா அரசு படை.

கடந்த 2013-ம் ஆண்டு ரசாயன குண்டுகளை வீசி அரசு படை நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். அதற்கு பிறகு நடந்த தாக்குதலில் கடந்த இரண்டு நாட்களில் நடந்த தாக்குதல் தான் மிக பெரிய உயிர் சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று மனித உரிமைகளுக்கான சிரிய ஆய்வுக்கூடம் தெரிவித்து இருக்கிறது.

சிரிய கிளர்ச்சியாளர்கள் இருந்த இடத்தில நடத்தப்பட்ட தாக்குதலில், இரண்டு நாட்களில் ஆறு மருத்துவமனைகள் தாக்கி பல மக்களை சிரியா அரசு படைகள் கொன்றதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. . நிலைமையை கண்காணித்து வருவதாக ஐ.நா அமைதி குழு தெரிவித்துள்ளது.

இதனிடையே துருக்கியையொட்டிய சிரியா எல்லையில் குர்துஸ் பகுதியில் துருக்கி படைகள் நுழைந்து வருகின்றன. எனவே துருக்கி படைகளை கட்டுப்படுத்தும் பொருட்டு அங்கு சிரியா அரசு படைகள் விரைந்துள்ளன. இதை தொடர்ந்து துருக்கி எல்லையிலும், சிரியா நாட்டு விமானப்படை குண்டு வீச்சு தாக்குதலை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னும் சில நாட்கள் இதே போன்ற தாக்குதல் தொடர்ந்தால் பொதுமக்கள் பலி எண்ணிக்கை கனிசமாக உயரும் என அச்சம் எழுந்துள்ளது.

அமெரிக்கா மற்றும் ரஷ்யா நாடுகள் தங்கள் பொருளாதார நலன்களுக்காக சிரியா மீது தொடர்ந்து போர் தொடுத்து வருகின்றன. இந்த போரில் லட்சக்கணக்கான அப்பாவிப்பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top