கமல் அரசியல் பிரவேசம்; தமிழக அரசியல் 40 வருடம் பின்னடைவை சந்திக்க உள்ளதா?

ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து இன்று தனது அரசியல் பயணத்தை நடிகர் கமல்ஹாசன் தொடங்கியுள்ளார். அப்துல் கலாமின் சகோதரர் முகம்மது முத்து மீரான் மரைக்காயரை சந்தித்து கமல்ஹாசன் வாழ்த்துக்கள் பெற்றார்.

தற்போது தமிழ்  நாட்டில் நிலவி வரும் அரசியல் சூழல் பெரும் குழப்பத்தை ஏற்படுத்த தயாராகி வருகிறது. முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா இறப்புக்கு பின்னர் தமிழ் நாடு அரசியலில் புதிதாக பல காட்சிகள் தொடங்கப்பட்டு வருகின்றன அதிலும், குறிப்பாக ரஜினி, கமல் ஆகியோரின் அரசியல் பிரவேசம் தொடங்கியுள்ளது.

ஜெயலலிதா மறைவிற்கு முன் ரஜினி, கமல் ஆகியோர் தமிழ் நாடு அரசியல் குறித்தும் மக்கள் பிரச்சனை குறித்தும் மேலும் மக்கள் போராட்டங்களில் இவர்கள் மக்களுடன் கலந்து கொண்டதும் இல்லை செயலாற்றியதும் இல்லை. மேலும், ஜெயலலிதா மறைந்த பிறகு ஆளும் அ.தி.மு.க அரசு மத்திய பா.ஜ.க அரசின் கைபொம்மையாக செயல் பட்டு வருவதாக தமிழக எதிர்க்கட்சிகள் மற்றும் இயக்கங்கள் தெரிவித்து வருகின்றன. மதவாத கட்சியாக பா.ஜ.க செயல்படுகிறது என்று தமிழ்நாடு முழுவதும் அரசியல் காட்சிகள் தெரிவிக்கின்றன.

இதனை தொடர்ந்து, கடந்த டிசம்பர் மாதம் ரஜினி கட்சி தொடங்கினர் அதில் அவர் ஆன்மிக அரசியலை முன்னெடுக்க போவதாக தெரிவித்தார். ரஜினி அரசியல் பிரவேசம் பா.ஜ.க பின் இருந்து செயல் படுவதாக காட்சிகள் குற்றம் சாட்டின.

இதனை தொடர்ந்து தற்போது இன்று கமல் ஹாசன் ராமேஸ்வரத்தில் கட்சி தொடங்கியுள்ளார். மக்களுக்கு புரியும் வகையில் தனது கொள்கைகளை எடுத்துரைப்பேன் என தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நடிகர் கமல்ஹாசன் கூறினார்.

மக்களுக்காக அரசியலில் செயல் பட உள்ளதாக ரஜினி மற்றும் கமல் குறிப்பிட்டு இருக்கின்றனர். கடந்த சில வருடங்களாக தமிழக மக்கள் எண்ணற்ற பிரச்சனைகளை சந்தித்தும் அதை எதிர்த்து போராடியும் வருகின்றனர். மத்திய அரசின் மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். காவிரி நதிநீர் பிரச்சனைக்காக தமிழக விவசாயிகள் தொடர்ந்து போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நீட் தேர்வை எதிர்த்து மாணவர்கள் பெரும் போராட்டத்தை மேற்கொண்டனர்.

தமிழர்களின் பண்பாட்டு விளையாட்டான ஜல்லிக்கட்டின் போதும் மாணவர்கள் பெரும் போராட்டத்தை நிகழ்த்தி ஜல்லிக்கட்டு தடையை உடைத்தனர். மேலும் மத்திய அரசின் ஜி.எஸ்.டீ வரி எதிர்த்து வணிகர்கள் மற்றும் சிறு குறு தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர் இது போன்று பல்வேறு பிரச்சனைகள் தமிழக மக்கள் சந்தித்து வருகின்றனர் ஆனால், இதில் ரஜினி, கமல் ஆகியோர் தமிழக மக்களின் இந்த பிரச்சனைக்கு அவர்களுடன் சேர்ந்து போராட்டத்தை மேற்கொள்ளவில்லை தனியாகவும் அரசுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுக்கவில்லை.

மக்கள் போராட்டத்தில் ஈடுபடாமலே ரஜினி ,கமல் ஆகியோர் அரசியல் பிரவேசம் எடுத்து இருப்பது அவர்களுக்குக்கான ரசிகர் படலங்கள் கொண்டு முன்னெடுக்க படுகிறது.  ரசிகர்களுக்கு தனக்கு புடித்தமான நபர் அரசியலுக்கு வருவதை விரும்புகின்றனர், ஆனால் அவர்களின் கொள்கைகளை பற்றி பெரிதாக கவலைப்படுவதில்லை என்று கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

40 ஆண்டுகளுக்கு  முன்பு எம்.ஜி.ஆர் தனது திரை உலக ரசிகர்களின் செல்வாக்கை வைத்து தமிழக அரசியலில் தடம் பதித்தார். அதை தொடர்ந்து இன்று வரை தமிழகத்தில் சினிமா நடிகர்கள் அரசியல் பிரவேசம் எடுத்து ஆட்சியமைத்து வருகின்றனர். ஆனால், தமிழக மக்களின் பிரச்சனைகள் அவர்களின் உரிமைகளும் தொடர்ந்து பறிக்கப்பட்டு, எந்த தீர்வும் இன்றி அப்படியே இருக்கின்ற நிலையில் புதிது புதிதாக நடிகர்கள் கட்சிகள் துவங்கி முதலமைச்சர் கனவோடு வருவது மக்களை ஏமாற்றவே என்கின்றனர் மக்கள்.  .

சமீபத்தில் தமிழகம் மற்றும் கேரள பகுதிகளை தாக்கிய ’ஓகி’ புயலில் சிக்கி பல்லாயிரக்கணக்கான தமிழக மீனவர்கள் கடலில் மாயமானார்கள் அவர்களை தேடும் பணியில் மத்திய அரசு சரியான முறையில் செயல்படவில்லை என்று கன்னியாகுமரி மீனவ கிராமமக்கள் அரசுக்கு எதிராக பெரும் போராட்டத்தை மேற்கொண்டனர்.

இன்று வரை மீனவர்கள் மத்திய அரசால் மீட்கப்படாமல் கடலில் மயமான நிலை உள்ளது. அவர்கள் பிரச்னை இன்றும் தொடர்ந்து வருகிறது மேலும், இலங்கை  கடற்படையால் மீனவர்கள் தாக்கப்பட்டும் வருகின்றனர் இது குறித்து ரஜினி மற்றும் கமல் எந்த போராட்டங்களை அந்த மக்களோடு சேர்ந்து முன்னெடுக்கவில்லை.

ஆனால், இன்று ராமேசுவரம் கணேஷ் மகாலில் மீனவ சங்கப் பிரதிநிதிகளை நடிகர் கமல்ஹாசன் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “மீனவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டியது தனது கடமை. தமிழகத்தில் முக்கியமான தொழில்களில் மீன்பிடித் தொழிலும் ஒன்று. மீனவத் தொழில் பாதுகாக்கப்பட வேண்டும். மீனவர்களும் பாதுகாப்புடன் தொழில் செய்ய வேண்டும். உங்களுக்கு ஏற்படும் சுக துக்கங்களை பத்திரிக்கை வாயிலாக அறிவதற்கு பதிலாக நான் நேரில் சந்தித்து அறிய வந்திருக்கிறேன். மாறி மாறி வரும் ஆட்சியாளர்கள் வாக்குறுதிகளை அள்ளி வீசினார்களே தவிர அதனை நிறைவேற்றவில்லை . நீங்கள் செயல்பட வேண்டிய விதம், சர்வதேச சட்டங்களைப் பற்றியும் நாம் பேச வேண்டும். நாம் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலாம், அதற்கான நாளும் ,நேரத்தையும் தேர்வு செய்வோம்” என்று தெரிவித்துள்ளார்.

கமலின் இந்த அரசியல் பிரவேசம் மக்கள் ஆதரவு இருப்பதைவிட அவரின் ரசிகர்கள் ஆதரவு தான் இருந்து வருகிறது. இந்த ரசிகர் மனப்பான்மை அரசியலால் தமிழக மக்கள் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. கொள்கைகள் மீதான பார்வை மற்றும் முக்கியத்துவத்தை இந்த ரசிகர் மனப்பான்மை அரசியல் பின்னடைவு ஏற்படுத்துகிறது என்று கூறப்படுகிறது.

தற்போது கமல் மற்றும் ரஜினி தனது ரசிகர்களின் எண்ணிக்கையை வைத்தே இவர்களின் அரசியல் செயல்பாடுகள் நிகழ்ந்து வருகிறது. ரசிகர்களை ஒன்றிணைத்து இவர்கள் கட்சிகளை உருவாக்கி வருகின்றனர், தமிழக மக்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு அளிக்கும் கொள்கைகளை கொண்டு கட்சிகள் உருவாகவில்லை.

மீண்டும், தமிழக அரசியல் சினிமா மோகம்  கொண்ட அரசியலாக  மாறிவிடுமோ என்ற பயம் எல்லோரிடமும் இருக்கிறது

40 வருட அரசியல் பின்னடைவை தமிழக அரசியல் மீண்டும் சந்திக்க கூடுமா என்று பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top