நிரவ் மோடியின் ரூ.11,400 கோடி வங்கி மோசடி விவகாரம்: விபுல் அம்பானி உட்பட 5 அதிகாரிகள் கைது

பஞ்சாப் நேஷனல்வங்கியில் ரூ.11,400 கோடி சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்து வைர வியாபாரி நிரவ் மோடி மோசடியில் ஈடுபட்டதாக அந்த வங்கி சிபிஐயிடம் புகார் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் பூதாகரமாகும் முன்பே, வெளிநாட்டுக்கு குடும்பத்துடன் நிரவ் மோடி தப்பி ஓடினார்.

இது தொடர்பாக சிபிஐ அமைப்பு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும், நிரவ் மோடியின் ரூ. 5 ஆயிரம் கோடிக்கும் அதிகமான சொத்துக்களை அமலாக்கப்பிரிவு முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்நிலையில் நிரவ் மோடியின் நிறுவனத்தில் நிதிநிலவரங்களைக் கையாண்டு வந்த உயரதிகாரி விபுல் அம்பானி உட்பட 5 அதிகாரிகளை சிபிஐ இன்று கைது செய்துள்ளது. இவர்களை விசாரணைக்கு அழைத்து சென்று விசாரித்த பிறகு கைது செய்துள்ளது சிபிஐ.

விபுல் அம்பானி, மறைந்த தீருபாய் அம்பானியின் மருமகன் என்று கூறப்படுகிறது, இவருடன் சேர்த்து நிறுவனத்தின் 5 அதிகாரிகளையும் பிஎன்பி வங்கியின் 11 அதிகாரிகளையும் நிரவ் மோடி மோசடி தொடர்பாக விசாரணை செய்தது சிபிஐ.

இந்நிலையில் நிரவ் மோடியின் மூத்த செயலதிகாரியான விபுல் அம்பானி உட்பட 5 அதிகாரிகளை சிபிஐ கைது செய்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top