பா.ஜ.க அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம் – சந்திரபாபு நாயுடு

2014, ஜூன் 2 அன்று ஆந்திர பிரதேசத்தில் இருந்து தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்ட பின்னர், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என அம்மாநிலத்தில் தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்த வண்ணம் இருந்தது. மாநில பிரிவின் பொது மத்தியில் காங்கிரெஸ் ஆட்சியில் இருந்தது.

2014-ம் ஆண்டு தேர்தலின் போது பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், பா.ஜ.க. அரசு அதனை நிறைவேற்றவில்லை.

கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற இந்த விவகாரத்தை எதிரொலித்ததின் விளைவாக இரு அவைகளும் அம்மாநில எம்.பி.க்களால் முடக்கப்பட்டன.

இதனை தொடர்ந்து முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி பா.ஜ.க கூட்டணியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் தெலுங்கு தேசம் கட்சி இன்னும் தொடர்வதால் மாநிலத்தில் கடும் அழுத்தத்தை சந்திரபாபு நாயுடு சந்தித்துள்ளார். இதன் காரணமாக ஆந்திராவின் நலனுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயார் என சில தினங்களுக்கு முன்னாள் கூறினார்.

ஒய்.ஆர்.எஸ் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி மத்திய அரசுக்கு எதிராக ஆந்திர எம்.பி.க்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள சந்திரபாபு நாயுடு, “பா.ஜ.க முழு பலம் பாராளுமன்றத்தில் உள்ளது. நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால் எளிதாக தோற்கடிக்கப்படும். எனினும், கடைசி தீர்வாக அது இருக்குமாயின் அதை செய்யவும் தயங்கமாட்டோம். தென் மாநிலங்களுக்கு நீதி கிடைக்கவேண்டுமானால் மற்ற கட்சிகளுடன் இணைந்து நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவோம்” என கூறினார்.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க விரைவில் அனைத்துக்கட்சி கூட்டத்தை குட்ட அவர் முடிவு செய்து இருக்கிறார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top