கோச்சடையான் பட கடன் தொகை -12 வாரங்களுக்குள் செலுத்த லதா ரஜினிகாந்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அவரது மகள் சவுந்தர்யா இயக்கத்தில் வெளியான படம் கோச்சடையான்.

இந்த படத்தை தயாரிப்பதற்காக ஆட்பீரோ நிறுவனத்திடம் லதா ரஜினிகாந்த் ரூ.10 கோடி கடன் வாங்கி இருந்தார். மீடியா ஒன் என்ற நிறுவனத்தின் பேரில் இந்த கடன் பெறப்பட்டது மேலும், அந்த நிறுவனத்தின் இயக்குனராக லதா, அவரின் மகள் ஐஸ்வர்யா தலைவராகவும் இருந்துவருகின்றனர்.

படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் ப்ரோடுச்டின் வேலைகள் நடந்து வந்த நேரத்தில், மீடியா ஒன் நிறுவனத்தின் குழு, ஈரோஸ் இன்டர்நேஷனலுக்கான தமிழ்நாடு விநியோக உரிமைகளை கடன் பெற்றவர்களிடம் கலந்து ஆலோசித்து உத்தரவு பெறாமலே விற்றுள்ளது.

மேலும், இந்த கடனில் ரூ. 1½ கோடி மட்டுமே இதுவரை கொடுக்கப்பட்டு இருந்தது.ஆட்பீரோ நிறுவனத்திடம் வாங்கிய ரூ.10 கோடியில் அவர் இன்னும் தராத ரூ.8½ கோடியை லதா ரஜினிகாந்த் திருப்பி செலுத்த வேண்டும். கடனை திருப்பி செலுத்தாதது தொடர்பாக அந்த நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது லதா ரஜினி காந்துக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியது. கோச்சடையான் படத்திற்கான கடனை எப்போது செலுத்துவீர்கள் என்று லதாவிடம் சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் எதற்காகக் கடனைத் திருப்பி செலுத்தாமல் இருக்கிறீர்கள் என்றும் இதுகுறித்து பகல் 12.30 மணிக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட் கெடு விதித்துள்ளது.

சுப்ரீம் கோர்ட் கொடுத்த கெடு முடிவடைந்த நிலையில், ரூ. 6.2 கோடி நிலுவைத் தொகையை 18 வாரங்களுக்குள் லதா ரஜினிகாந்த் செலுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மீடியா ஒன் குளோபல் நிறுவனத்தின் சார்பில் லதா ரஜினிகாந்த் நிலுவைத் தொகையை வழங்க
வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top