சிரியா அரசுப் படை வான்வழித் தாக்குதல்: பொது மக்கள் 100 பேர் பலி; 300 பேர் காயம்

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுபாட்டுப் பகுதியில் அரசுப் படை நடத்திய வான்வழித் தாக்குதலில் பொது மக்கள் 100 பேர் பலியாகினர்.

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக புரட்சிப் படையினர் ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தலைநகர் டமாஸ்கஸ் அருகேயுள்ள கிழக்கு கவுட்டா பகுதி 2013ம் ஆண்டில் இருந்து புரட்சிப் படை வசம் உள்ளது. உள்ளூர் பொதுமக்கள் கிளர்ச்சியாளர்கள் மீது அரசு பெரிய தாக்குதலை நடத்தி வருகிறது என்றனர், இது 2013 ல் இருந்து முற்றுகைக்கு உட்பட்டுள்ளது.

கிழக்கு கவுட்டா முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் நேற்று அரசு ஆதரவு படைகள் தாக்குதல் நடத்தின. விமான தாக்குதல், ராக்கெட் குண்டு தாக்குதல், பீரங்கி தாக்குதல் என நீண்ட நேரம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், அப்பாவி பொதுமக்கள் கொத்துக்கொத்தாக மடிந்தனர். 18 பேர் உயிரிழந்ததாகவும், ஏராளமானோர் காயமடைந்திருப்பதாகம் நேற்று இரவு செய்தி வெளியானது.

கடந்த டிசம்பர் முடிவில் மட்டும் குறைந்தபட்சம் 100 குழந்தைகள் உட்பட 400 க்கும் அதிகமான பொதுமக்கள் அரசு படையினரால் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்று அரசுப் படைகள் நடத்திய உக்கிரமான தாக்குதல்களில் 20 குழந்தைகள் உள்ளிட்ட 100 பேர் வரை உயிரிழந்திருப்பதாக பிரிட்டனைச் சேர்ந்த மனித உரிமைகள் கண்காணிப்கம் தெரிவித்துள்ளது. சுமார் 300 பேர் காயமடைந்திருப்பதாகவும் கூறியுள்ளது.

அரசு படையினர் நடத்தும் இந்த தாக்குதலில் பொதுமக்களே அதிகம் கொல்லப்படுகின்றனர். தொடர்ச்சியாக அவர்கள் மீது தகுலத்தால் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த இந்த தாக்குதல் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் அந்த பகுதியில் இருந்து வெளியேற முடியாமல் சிக்கியுள்ளார். உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என்று கூறப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top