ஆந்திராவில் 5 தமிழர்கள் இறப்பில் சந்தேகம்; சிபிஐ விசாரிக்க வேண்டும் – வைகோ வலியுறுத்தல்

ஆந்திராவில் கடப்பா ஒண்டிமிட்டா ஏரியில் தமிழகத்தை சேர்ந்த 5 பேர் மர்மமான முறையில் இறந்துள்ளனர். அவர்களின் சடலங்களை போலீ ஸார் நேற்று முன்தினம் மீட்டனர். உயிரிழந்த தமிழர்களின் சிலரது உடல், கை, கால்களில் காயங்கள் இருந்தன. மேலும் இந்த ஏரியில் இடுப்பளவு தண்ணீர் மட்டுமே உள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே, போலீஸார் கூறுவதுபோல், இவர்கள் நீரில் மூழ்கி இறப்பதற்கான வாய்ப்பு குறைவு. எனவே, இவர்களது மரணத்தில் ஏதோ சதி நடந்திருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பினாங்கு துணை முதலமைச்சர் ராமசாமி ஆகியோர் நேற்று கோவை வந்திருந்தனர்.

ஐந்து தமிழர்கள் மறுமண உயிரிழப்பு குறித்து விமான நிலையத்தில் வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஆந்திர மாநிலத்தில் காவல்துறையினரால் கூலி வேலைக்குச் செல்லும் தமிழர்கள் கொல்லப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, ஆந்திர மாநில ஏரியில் 5 தமிழர்கள் சடலமாக மிதந்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. அவர்கள் அடித்துக் கொலை செய்யப்பட்டார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. எனவே, இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகம் தொடர்ந்தால் சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்த வேண்டும் என்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top