20 ஓவர் கிரிக்கெட் போட்டி, தென்ஆப்ரிக்காவை வீழ்த்தி தொடரை கைப்பற்றுமா இந்தியா ?

இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 டெஸ்ட் கொண்ட தொடரை தென்ஆப்பிரிக்கா 2-1 என்ற கணக்கிலும், 6 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 5-1 என்ற கணக்கிலும் கைப்பற்றியது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஒருநாள் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை மேற்கொண்டு தொடரை கைப்பற்றியது.

இதற்கு பின் தொடங்கிய 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் ஜோகன்ஸ்பர்க்கில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 28 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஜோகன்ஸ்பர்க்கில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன் குவித்தது. தொடக்க வீரர் தவான் 39 பந்தில் 72 ரன் எடுத்தார். இதில் 10 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும். பின்னர் விளையாடிய தென்ஆப்பிரிக்க அணியால் 9 விக்கெட் இழப்புக்கு 175 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் இந்தியா 28 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணி தென்ஆப்பிரிக்கா மண்ணில் இதுவரை மூன்று தொடர்களில் விளையாடியுள்ளது. ஏற்கனவே 2 முறை 20 ஓவர் தொடரை கைப்பற்றி இருந்தது. 2006-ல் 1-0 என்ற கணக்கிலும், 2011-ல் 1-0 என்ற கணக்கிலும் வென்றது இந்திய அணி தொடரை வென்றது. 2012-ல் 0-1 என்ற கணக்கில் இழந்தது. இந்த 3 தொடர்களுமே ஒரே ஒரு போட்டியை கொண்டதாக இருந்தது.

முதல் முறையாக தற்போது தான் 3 பொதிகள்கொண்ட தொடராக இரு அணிகளும் மோதிவருகின்றன.

பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சமபலத்துடன் இந்திய அணி இருக்கிறது. பேட்டிங்கில் கேப்டன் விராட் கோலி, தவான், ரோகித் சர்மா, டோனி, மனிஷ் பாண்டே ஆகியோர் சிறப்பான நிலையில் உள்ளனர். மற்றும் பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார், யசுவேந்திர சஹால் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி செஞ்சூரியனில் நாளை (21-ந்தேதி) நடக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற இந்திய அணி ஆர்வத்துடன் இருக்கிறது.

தென்ஆப்பிரிக்கா ஒருநாள் தொடரை இழந்த உள்ள நிலையில், தென்ஆப்பிரிக்கா 20 ஓவர் தொடரை இழக்காமல் இருக்க இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி உள்ளது. தொடரை சமன் செய்ய அந்த அணி வெற்றி பெற கடுமையாக போராடும் என்பதால் 2-வது 20 ஓவர் போட்டி இரு அணிகளுக்கும் சவால்கள் நிறைந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிவில்லியர்ஸ் இல்லாதது அந்த அணி பின்னடைவை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அணியில் பேட்டிங்கில் ஹென்ட்ரிக்ஸ், பெகருதீன், மில்லர் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். ஒருநாள் தொடரை இழந்த தென்ஆப்பிரிக்கா 20 ஓவர் தொடரையும் இழக்காமல் இருக்க இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் ஆர்வத்துடன் உள்ளது.

நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு தொடங்குகிறது.

இரு அணி வீரர்கள் வருமாறு:-

இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, தவான், ரெய்னா, மனிஷ் பாண்டே, டோனி, ஹர்த்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், யசுவேந்திர சஹால், ஜெய்தேவ் உனட்கட், பும்ரா, தினேஷ் கார்த்திக், குல்தீப் யாதவ், ‌ஷர்துல் தாகூர், அக்‌ஷர் பட்டேல், ராகுல்.

தென்ஆப்பிரிக்கா: டுமினி (கேப்டன்), ஹென்ட்ரிக்ஸ், ஜான் ஸ்முட்ஸ், மில்லர், பெகருதீன், கிளாசன், பெகுல்வாயோ, கிறிஸ் மோரிஸ், பேட்டர்சன், ஜூனியர் டாலா, தபரிஸ் சம்சி, கிறிஸ்டியன் ஜான்கர், பான்ஜியோ.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top