கமல்ஹாசனுக்கு கட்சி தொடங்க தகுதியில்லை – கரூரில் தே.மு.தி.க. மாநில மகளிரணி தலைவி

கரூரில் தே.மு.தி.க. மகளிரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட மகளிரணி செயலாளர் கமலா தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாநில மகளிரணி செயலாளர் மாலதி வினோத் நிருபர்களிடம் கூறியதாவது:-

தற்போது கட்சி தொடங்கும் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் மீடியாவை பார்த்தாலே பயமாக இருக்கிறது என சொல்பவர்கள் எப்படி மக்கள் பிரச்சினையை தீர்ப்பார்கள்.

அப்துல்கலாம் மறைவின் போது அஞ்சலி செலுத்தாத நடிகர் கமல்ஹாசனுக்கு ராமேஸ்வரத்தில் இருந்து கட்சி தொடங்க தகுதியில்லை. ரஜினி, கமலை கண்டு எங்களுக்கு பயமோ, கவலையோ கிடையாது. 18 ஆண்டுகளுக்கு முன்பே விஜயகாந்த் தனது மன்ற கொடியை அறிமுகம் செய்துவிட்டார். அதனால் தான் தலைவர் விஜயகாந்த், கட்சி தொடங்கும் ரஜினி, கமலை எனக்கு அரசியலில் ஜுனியர்கள் என்று கூறினார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்ட செயலாளர் கே.வி. தங்கவேல் மற்றும் மாலதி வினோத் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் சர்க்கரை பிரிவு பொன் இளங்கோ, மாவட்ட துணை செய லாளர்கள் சோமூர் ரவி, கஸ்தூரி தங்கராஜ், நகர செயலாளர் காந்தி, பொதுக்குழு உறுப்பினர் முருகன் சுப்பையா, ஒன்றிய செயலாளர்கள் கடவூர்சிவம் ராஜேந்திரன், ஜெயகுமார், பிரபு, ராம்குமார், கார்த்திக்கேயன் மற்றும் தாமோதரன், அருள்மொழி தேவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top