மே பதினேழு இயக்கத்தின் ‘வெல்லும் தமிழீழம்’ மாநாடு சென்னையில் நடந்தது

 

 

மே பதினேழு இயக்கத்தின் ‘வெல்லும் தமிழீழம்’ – தமிழீழ விடுதலைக்கான எழுச்சி மாநாடு நேற்று  நான்கு அமர்வுகளாக காலை 10  மணிக்கு துவங்கி  இரவு 10.30 வரை  சேப்பாக்கம் அண்ணாஅரங்கில் நடந்தது.

 

மாநாட்டுக்கு சிறப்பு அழைப்பாளராக மலேசிய நாட்டின் பினாங்கு மாகாணத்தின் துணை முதல்வர் இராமசாமி அழைக்கப்பட்டு இருந்தார்.

 

ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்த மாநாட்டில் 13 தீர்மானங்கள் அடங்கிய சென்னை பிரகடனம்ஒட்டுமொத்த மக்களின் கரஒலியுடன் ஒப்புதல் அளித்து ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது

மாலை அமர்வு ‘தமிழீழ விடுதலைக்கான அரசியல் நகர்வுகளும் நம் உடனடிக் கடமைகளும்’ என்ற தலைப்பின் கீழ் நடைபெற்றது.அதில் தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் அவர்களும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின்  பொதுச்செயலாளர் திரு.வைகோ அவர்களும் , தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, SDPI கட்சியின் மாநில தலைவர் தெகலான் பாகவி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் பாலாஜி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை செயலாளர் வீரபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர்கள். மாலை அமர்வு புத்தர் கலைக்குழுவின்  பறை இசையுடன் துவங்கியது.

மேலும்,கவுண்டர் கரண்ட் – Countercurrents.com  ஊடகத்தின் ஆசிரியர் பினு மாத்திவ், மணிப்பூர் சட்டத்துறை பேராசிரியர் மாலெம் மங்கள், டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தின் மணிப்பூர் மாணவர் அமைப்பின் துணைத் தலைவர் யூரெம்பா முடும் ஆகியோரும் தமிழீழத்தின் விடுதலையையும், சுய நிர்ணய உரிமையையும் ஆதரித்து பேசினர்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் விடுதலை புலிகளின் மீது இருந்த தடையை நீக்க அயராது பாடுபட்ட  சுவிட்சர்லாந்தின் தமிழீழ செயல்பாட்டாளர் லதன் சுந்தரலிங்கம் அவர்களின்  காணொளி செய்தி காண்பிக்கப்பட்டது.   வடக்கு மாகாண சபை உறுப்பினரான எம்.கே.சிவாஜிலிங்கம், இலங்கையின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் காணொளி செய்தியை அனுப்பியிருந்தனர்.ஆனால் தொழிற்நுட்ப பிரச்சனைகளால் அது காண்பிக்கப்படவில்லை. வடக்கு மாகாண சபை அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் அறிக்கையினை அனுப்பியிருந்தார்.

 

வெல்லும் தமிழீழம் மாநாட்டின் தீர்மானங்கள் ‘சென்னைப் பிரகடனம்’ என்ற பெயரில் வெளியிடப்பட்டது.

 

தீர்மானங்கள்:
1. தனித் தமிழீழத்திற்கான சர்வதேச பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்

 1. ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்.
 2. தமிழீழ இனப்படுகொலையில் பங்கெடுத்த பிற சக்திகள் மீதும் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்.
 3. ஈழத்தமிழரின் வரலாற்று தாயகத்தில் இருந்து சிங்கள இராணுவம் உடனடியாக வெளியேற வேண்டும்.
 4. இலங்கையில் மத வழிபாட்டுத் தளங்கள் மீதான தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும்:
 5. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இறையாண்மையுள்ள நிலப்பரப்பாக இருந்த தமிழீழப்பகுதிக்கான தன்னாட்சிப் பிரதேசத்திற்கு அங்கீகாரம் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.
 6. தமிழர் பெருங்கடலில் நடக்கும் இராணுவ, விரிவாதிக்கப் போட்டிகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
 7. இந்தியா,அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலுள்ள விடுதலைப் புலிகள் மீதான தடைகள் நீக்கப்பட வேண்டும்.
 8. தமிழகத்தில் வாழும் தமிழீழ அகதிகளுக்கான உரிமை சர்வதேச சட்டத்தின்படி வழங்கப்பட வேண்டும்.
 9. 2013ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ’தமிழினப்படுகொலை’ தீர்மானத்தின் அடிப்படையில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் தமிழர்களின் பண்பாட்டு உரிமையான நினைவேந்தலை சென்னை மெரினாவில் நடத்த உரிமை வேண்டும்.
 10. தமிழினப்படுகொலைக்கான நினைவுச் சின்னத்தை சென்னை மெரினாவில் தமிழக அரசு அமைக்க வேண்டுமென்று இந்த மாநாடு வலியுறுத்துகிறது.
 11. தமிழக சட்டமன்றத்தில் 2013ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களான தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பு மற்றும் இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை போன்றவற்றை இந்திய ஒன்றியத்தில் இருக்கிற பிற மாநில சட்டமன்றங்களில் மற்றும் இந்திய பாராளுமன்ற மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும் தீர்மானங்களாக நிறைவேற்றிட தமிழக கட்சிகள் மற்றும் இயக்கங்கள் முயற்சியை மேற்க்கொள்ள வேண்டுமென்று இந்த மாநாடு கேட்டுக்கொள்கிறது.
 12. இந்திய ஒன்றியத்தில் இருக்கும் எல்லையோர மாநிலங்களுக்கு அதன் அயலுறவு கொள்கையை அந்த மாநிலத்தின் அரசியல், வாழ்வியல், வரலாற்றியலைக் கொண்டு தீர்மானிக்கும் உரிமையை வழங்கிட தமிழக கட்சிகள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

பெருத்த கரஒலிக்கிடையில் அத்தனை தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.   ‘வெல்லும் தமிழீழம்’ என்ற இந்த மாநாடு 2013ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் நடத்தப்பட்டது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top