தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி தொடரை வெல்ல காரணம் சுழற்பந்து வீரர்கள் தான் : விராட் கோலி

இந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையிலான 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நேற்று நடந்தது. இதில் இந்தியா அபாரமாக விளையாடி 5-1 எனத் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனைப் படைத்தது.

இதற்கு முன் நடந்த டெஸ்ட் தொடரில் தென் ஆப்ரிக்காவிடம் இந்தியா படுதோல்வியை சந்தித்தது, எதற்கு பதில் அடிகொடுக்கும் வகையில் இந்தியா அணி ஒரு நாள் தொடரில் வெற்றிபெற்றுள்ளது. தென்ஆப்பிரிக்கா அணியால் எந்த வகையிலும் இந்தியாவிற்கு ஈடுகொடுக்க முடியவில்லை. மழையால் 28 ஓவர்களாக குறைக்கப்பட்ட ஜோகன்னஸ்பர்க் போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது.

செஞ்சூரியனில் நேற்று நடந்த கடைசி ஒரு நாள் ஆட்டத்தில், தென் ஆப்பிரிக்கா அணி முதலில் விளையாடிய 46.5 ஓவர்களில் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 204 ரங்களுக்கு சுருண்டது. ஜோன்டோ அதிகபட்சமாக 54 ரன் எடுத்தார். தனது முதல் போட்டியிலேயே ‌ஷர்துல் தாகூர் 4 விக்கெட் வீழ்த்தி முத்திரை பதித்தார். பும்ரா, யசுவேந்திர சாஹல் தலா 2 விக்கெட்டும், குல்தீப் யாதவ், ஹர்த்திக் பாண்ட்யா தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் விளையாடிய இந்திய அணி 32.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 206 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அவர் 96 பந்தில் 129 ரன் குவித்து ஆட்டம் இழக்காமல் கேப்டன் விராட்கோலி தனது 35-வது சதத்தை பதிவு செய்தார். இதில் 19 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும். ரகானே 34 ரன் எடுத்தார்.

இந்த வெற்றி மூலம் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா 5-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. தென்ஆப்பிரிக்க மண்ணில் இந்திய அணி முதல் முறையாக தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது. இதற்கு முன்பு அந்நாட்டில் 4 முறை ஒருநாள் தொடரில் இந்தியா ஆடி இருக்கிறது.

மேலும், தென்ஆப்பிரிக்கா மோசமான சாதனையை பதிவு செய்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரில் சொந்த மண்ணில் 2-வது முறையாக 5 போட்டிகளை இழந்துள்ளது.

தென்ஆப்பிரிக்கா அணி கேப்டன் டு பிளிசிஸ் முதல் போட்டிக்குப் பிறகும், குயின்டான் டி காக் முதல் இரண்டு போட்டிகளுக்குப் பிறகும் தொடரில் இருந்து விலகினார்கள். டி வில்லியர்ஸ் முதல் மூன்று போட்டிகளிலும் காயத்தால் பங்கேற்கவில்லை. இந்த வீரர்கள் விளையாடாததால் தென் ஆப்பிரிக்காவின் தோல்விக்கு இதுவும் ஒரு முக்கியமான காரணமாக அமைத்தது.

இந்தியாவின் வெற்றி குறித்து கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-

இந்த ஆடுகளத்தில் மின்னொளியில் பேட்டிங் செய்வது எளிதாக இருந்தது. இதன் காரணமாகவே ‘டாஸ்’ வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தேன். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்ற சுழற்பந்து வீரர்கள் சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் காரணமாக இருந்தனர். அவர்கள் இந்த தொடரில் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தினர். டெஸ்ட் தொடரை இழந்த பிறகு ஒருநாள் தொடரை கைப்பற்றியது சிறப்பானது.

அடுத்த வரும் 20 ஓவரிலும் எங்கள் திறமையை வெளிப்படுத்துவோம். இதிலும் சுழற்பந்து வீரர்கள் திறமையை வெளிப்படுத்துவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top