5 நாட்களாக நடந்த எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள் ஸ்டிரைக் வாபஸ் – போராட்டம் முடிவுக்கு வந்தது

மண்டல அளவில் நடைபெறும் வாடகை டெண்டர் முறையை மாற்றி மாநில அளவில் டெண்டர் நடைபெறும் என்று மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது.

இந்த புதிய டெண்டர் முறையினால் பல ஆயிரம் தொழிலார்கள் வேலையிழக்க கூடும் மற்றும் லாரி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்க கூடும் என்று இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் கடந்த 12-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தன.

இதனால் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் உள்ள 4500 கியாஸ் டேங்கர் லாரிகள் 3-வது நாளாக இன்றும் இயங்கவில்லை.

இதே கோரிக்கையை வலியுறுத்தி மேற்கு வங்கம், பீகார், ஒரிசா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களை சேர்ந்த கிழக்கு மண்டல கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிலிண்டர்களில் எரிவாயு நிரப்பும் பணியும் பாதிக்கப்பட்டது.

கடந்த 14-ந் தேதி மும்பையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்ந்தது. தென்மண்டலத்தில் சுமார் 13 ஆயிரம் டன் எரிவாயு எடுத்துச் செல்லும் பணியும், 14 லட்சம் சிலிண்டர்களில் எரிவாயு நிரப்பும் பணியும் முடங்கியது.

5 நாட்களாக போராட்டம் நீடித்ததால் தமிழகம் உள்பட 6 மாநிலங்களிலும் பெரும்பாலான பகுதிகளில் ஓரிரு நாளில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவானது. எனவே, போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து லாரி உரிமையாளர்கள் பல கோரிக்கையை முன்னிறுத்தி போராடிவந்தனர், அதில் சில கோரிக்கைகளை ஏற்க எண்ணெய் நிறுவனங்கள் சம்மதம் தெரிவித்துள்ளன.

எண்ணெய் நிறுவனங்கள் ஒப்புக்கொண்ட சில கோரிக்கைகளின் அடிப்படையில், நாமக்கல்லில் இன்று தென் மண்டல எல்.பி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூடி ஆலேசானை நடத்தினர். இந்த ஆலோசனையின்போது, டெண்டர் தொடர்பாக எண்ணெய் நிறுவனங்கள் உறுதி அளித்திருப்பதால் வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.

அதேசமயம், லாரி உரிமையாளர்களின் முக்கிய கோரிக்கை பற்றி தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. இதன்மூலம், கடந்த 5 நாட்களாக நடந்த ஸ்டிரைக் முடிவுக்கு வந்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top