உச்சநீதிமன்றம் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்தை அகற்றக் கோரி வழக்கு பிப்.19-ல் தீர்ப்பு

 

உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை சட்டப்பேரவையிலிருந்து அகற்றக் கோரிதொடரப்பட்ட வழக்கில் வரும் 19-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் சட்டப்பேரவையில் கடந்த 12-ம் தேதி திறக்கப்பட்டது. சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டவர் என்பதால், ஜெயலலிதாவின் படத்தை சட்டப்பேரவையில் இருந்து அகற்ற உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் வழக்கு தொடர்ந் தார்.

 

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் கொண்ட முதல் அமர்வு முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

 

திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, “அரசியலமைப்புச் சட்டப்படி, சட்டப்பேரவை நடவடிக்கைகளில்தான் நீதிமன்றம் தலையிட முடியாது. ஆனால், பேரவையில் ஒருவரது உருவப்படம் வைப்பது நிர்வாக நடைமுறைதான். அதில் நீதிமன்றம் தலையிட முடியும். எனவே, சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்தை பேரவையில் இருந்து அகற்ற உத்தரவிட வேண்டும்” என்று வாதிட்டார்.

 

தமிழக அட்வகேட் ஜெனரல் விஜயநாராயண், ‘‘மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை குற்றவாளி என்று உச்ச நீதிமன்றம் தெரிவிக்கவில்லை. அதனால், பேரவையில் அவரது படம் திறந்ததில் தவறு இல்லை” என்று அப்பட்டமான ஒரு பொய்யை நீதிமன்றத்தில் வைத்தார்.அதை எதிர்த்து மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் ஒரு பகுதியை படித்து காண்பித்தார்

 

இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் வரும் 19-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்தனர்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top