அமெரிக்கா, புளோரிடா பள்ளியில் முன்னாள் மாணவர் துப்பாக்கிச் சூடு – 17 பேர் படுகொலை

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மார்ஜரி ஸ்டோன்மேன் டக்ளஸ் உயர்நிலை பள்ளியில் முன்னாள் மாணவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பள்ளி மாணவர்கள் உட்பட 17 பேர் கொல்லப்பட்டனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில், “புளோரிடாவின் பார்க்லாண்டில் உள்ள ஸ்டோன்மேன் டக்லஸ் மேல்நிலைப்பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடந்தது. அப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் நிகோலஸ் க்ரூஸ் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அவருக்கு வயது 19. அந்த நபரின் இணையபக்கம் அவரது சமூக ஊடக பக்கங்களை ஆய்வு செய்து வருகிறோம். விசாரணையில் எப்பிஐ புலணாய்வு நிறுவனமும் எங்களுக்கு உதவி வருகிறது. ஒழுங்கு அற்ற நடத்தையின் காரணமாக நிக்கோலஸ் க்ரூஸ் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். நிக்கோலஸிடம் இருந்து அதிக அளவில் துப்பாக்கி மேகசின்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. துப்பாக்கி சூடில் ஈடுபட்ட நிகோலஸை பக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தற்போது போலீஸ் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் இது குறித்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

பலியான 17 பேரில் 12 பேர் பள்ளி வளாகத்துக்குள்ளும் ஒருவர் வளாகத்துக்கு வெளியிலும் மற்றும் இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றியும் பலியாகியுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. இருப்பினும் இவர்களில் எத்தனை பேர் பள்ளி மாணவர்கள் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இந்திய வம்சாவளி மாணவர் ஒருவரும் இத்துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவில் துப்பாக்கி சுடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த துப்பாக்கி அதிகரித்து வருகிறது. துப்பாக்கி சூடு சம்பம் பள்ளிகளில் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் சர்வசாதாரணமாக துப்பாக்கிகள் புழங்குவதால் வன்முறையும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பள்ளிகளில் மாணவர்கள் நடத்தும் தாக்குதல்கள், பொது இடங்களில் நடத்தப்படும் தாக்குதல்களில் பலர் பலியாகி உள்ளனர்.
அதிகரித்து வரும் இந்த துப்பாக்கி சூடு சம்பவங்கள் அமெரிக்கா சமூகம் வன்முறையில் சூழப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

அமெரிக்காவில் உள்ள பள்ளிகளில் இந்த ஆண்டில் இதுவரை 18 துப்பாக்கி சூடு நம்பவங்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top