‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தை கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு அனுப்ப படக்குழு திட்டம்

‘ஆரண்ய காண்டம்’ என்னும் விமர்சன ரீதியாக பெரிய வெற்றி பெற்ற படத்தைத் தொடர்ந்து, பல ஆண்டுகள் கழித்து ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பை முடித்து, திரைப்பட விழாவுக்கான எடிட்டிங்கை முடித்து கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு அனுப்ப படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்த படத்தில் மிக முக்கியமான ஒரு கதாபத்திரத்தில் நடித்து இருக்கும் மிஷ்கின், இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா, நளன் குமாரசாமி மற்றும் நீலன் கே.சக்கர் ஆகியோருடன் இந்த படத்திற்கு திரைக்கதை எழுதவும் செய்துள்ளார்.

சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இயக்குனர் மிஷ்கின் கலந்து கொண்டு பேசும் பொது இந்த படம் தொடர்பான ஒரு செய்தியை வெளியிட்டார் அதில் அவர் கூறியதாவது, தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகி வரும் ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படம் வரவிருக்கும் மே மாதம் கென்னஸ் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ள உள்ளது என்று தெரிவித்தார்.

விஜய் சேதுபதி, சமந்தா, ஃபகத் பாசில், இயக்குநர் மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்தை தியாகராஜன் குமாரராஜா தயாரித்துள்ளார். பண மதிப்பு நீக்கப் பிரச்சினையால் இதன் படப்பிடிப்பு தடைபட்டு, தற்போது வேகமாக இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

யுவன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம், பி.எஸ்.வினோத், நீரவ்ஷா என 3 ஒளிப்பதிவாளர்கள் பணிபுரிந்துள்ளார்கள். சில்பா என்ற திருநங்கையாக விஜய்சேதுபதி, வியம்பு என்ற கதாபாத்திரத்தில் சமந்தா, பாதிரியார் வேடத்தில் மிஷ்கின் என இப்படம் குறித்த தகவல்கள் யாவுமே புதுமையாக இருப்பதால், படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது.

சூப்பர் டீலக்ஸ் டீஸர் ஜனவரி 3 ம் தேதி வெளியானது, இந்த டீஸர் வெளியாகி ரசிர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது மற்றும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளது. மிகவும் திறமையான நடிகர்களைக் கொண்டும், ஸ்கிரிப்ட்டை எழுதுவதில் மிகவும் பல்துறை திரைப்பட இயக்குநர்கள் ஈடுபட்டுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

சூப்பர் டிலக்ஸ் படத்தின் நடிகர்கள் அனைவரும் அவர்களின் நடிப்பை ஒரு வித்தியாசமான பரிமாணத்தில் வெளிப்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது, இந்த திரைப்பட ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை தரவுள்ளது என்பது நிச்சயம்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top