பருவநிலை மாற்றம், வேகமாக உயரும் கடல்நீர் மட்டம்: ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை

மனிதர்களின் சுயநலத்தால் அதிகரிக்கும் மாசுகள் பருவநிலை மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. பருவநிலை மாற்றம் கடல் மட்டம் உயர்வதை வேகப்படுத்தியிருப்பதாக சமீபத்தில் நடந்த ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

கொலராடோ பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், 1993ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் கடல் மட்டம் எந்த அளவு இருந்தது தற்போது எந்த அளவு உயர்ந்துள்ளது என்று ஆய்வு செய்யப்பட்டது.

செயற்கைக்கோள்கள் மூலம் கிடைக்கும் தகவல்களை வைத்து ஆய்வு செய்யப்பட்டதில் சர்வதேச அளவில் கடல் மட்ட உயர்வின் அளவை இன்னும் துல்லியமாக காட்டும்.

கடந்த 25 ஆண்டுகளில் 7 செண்டிமீட்டர் அளவு கடல் மட்டம் உயர்ந்துள்ளதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இது, வருடத்துக்கு 3 மில்லிமீட்டர் உயர்வு என்ற அளவை ஒத்துப்போவாதாக உள்ளது. ஆனால் இந்த உயர்வு நிலையான அளவல்ல.

கடல்நீர்மட்டம் 20-ம் நூற்றாண்டுக்கு முன்பு வரை நிலையாக இருந்தது. அதன்பின் உலக வெப்பமயமாதலின் விளைவால் பனி உருகி நீர்மட்டம் அதிக அளவில் உயர்ந்துள்ளது.

மனிதர்கள் தங்கள் தேவைக்காக கட்டுப்பாடுகள் அற்று பொருளைகளை உற்பத்தி செய்துவருவத்தின் மூலம் பூமியின் கற்று, நீர் நீளம் என்ன அனைத்தும் மாசு அடைந்து, மேலும் காடுகள் அழிக்கப்படுவதும் புவியின் வெப்பம் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து அதிகரித்து வரும் பசுங்குடில் வாயுக்கள் -greenhouse gases வெளியேற்றத்தால் பூமியின் வளிமண்டலம் வெப்பமடைந்து வருகிறது. இதனால் கடல்பகுதிகளில் இருக்கும் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன. இதுவே கடல் மட்டம் உயரவும் காரணமாக உள்ளது.

அண்டார்டிகா மற்றும் கிரீன்லாந்தில் உள்ள பனிமலைகள் மிகவும் வேகமாக உருகி வருவதால் கடல் மட்ட உயர்வும் வேகப்படுத்தப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் 2100ஆம் ஆண்டில் 60 செண்டிமீட்டர் வரை கூட கடல் மட்டம் உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

65 செண்டிமீட்டர் வரை கடல் மட்டம் உயர்ந்தால், கடலோரமாக இருக்கும் நகரங்களுக்கு பெரும் பாதிப்பு உண்டாகும். மேலும், உயர் அலைகள், வலுவான புயலால் ஏற்படும் கடல் சீற்றம் என இந்த பாதிப்பு பன்மடங்காகும் ஆபத்தும் உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top