ஆர்எஸ்எஸ் தொண்டர்களுடன் மோகன் பகவத் எல்லையில் நிற்க வேண்டும் – அசாசுதீன் ஒவைசி

ராணுவத்தைக் காட்டிலும் வேகமாக போருக்கு தயாராவோம் எனக் கூறும் மோகன் பகவத், ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்களுக்கு தலைமை ஏற்று இந்திய எல்லையில் நிற்க வேண்டும் என்று ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவருமான, எம்.பியுமான அசாசுதீன் ஒவைசி கூறியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்னாள் ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத், “ போருக்கு ராணுவம் தயாராக 6 மாதங்கள் தேவை, ஆனால், எங்களின் படை 3 நாட்களில் தயாராகும்” எனத் தெரிவித்தார்.

இதன் காரணமாக இவர்க்கு நாடுமுழுவதும் பெரும் கண்டனங்கள் எழுந்தன, கண்டங்கள் வந்ததையடுத்து தனது கருத்து தவறாகச் சித்தரிக்கப்பட்டுவிட்டதாக கூறினார்.

இதை தொடர்ந்து, ராணுவத்தினர் குறித்து அவதூறாகப் பேசியதற்காக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மீது பிஹார் மாநிலத்தின் முசாபர்பூர் நீதிமன்றத்தில் எம். ராஜு நய்யார் எனும் வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நாளை விசாரணக்கு வருகிறது

இந்நிலையில், ஐதராபாத்தில் ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாசுதீன் ஒவைசி நிருபர்களுக்கு பேட்டி அதில் அவர் கூறியதாவது:-

இரவு 9 மணிக்கு தொலைகாட்சிகளில் விவாதங்களில் பங்கேற்பவர்கள் காஷ்மீர் முஸ்லிம்களின் , இந்திய முஸ்லிம்களின் தேசப்பற்றைப் பற்றி விவாதிக்கிறார்கள். ஆனால், காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த ராணுவத்தில் இருக்கும் முஸ்லிம் வீரர்கள் 5 பேர் சஞ்சுவான் முகாமில் தீவிரவாதிகளால் சுடப்பட்டு நாட்டுக்காக உயிரை தியாகம் செய்துள்ளனர். அது குறித்து யாரும் பேசுவதில்லை.

நாட்டின் புலனாய்வுத் துறை சஞ்சுவான் ராணுவ முகாம்மீது தீவிரவாதிகள் நடத்த இருக்கும் தாக்குதலை முன்கூட்டியே கண்டுபிடிப்பதில் தோல்வி அடைந்துள்ளது. பிரதமர் மோடி தனது சுற்றுலாவை முடித்து தற்போது வேலைபளு இன்றி இருப்பார். ஆனால், இது குறித்து அவர் இன்னும் ட்வீட் செய்யவில்லை.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரும், பாகிஸ்தான் பாதுகாப்பு ஆலோசகரும் பாங்காக் நகரில் பேச்சு நடத்தியதில் என்ன முன்னேற்றம் இருக்கிறது.

ராணுவத்தைக் காட்டிலும் போருக்கு வேகமாகத் தயாராவோம் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியுள்ளது ராணுவத்தினரின் உணர்வுகளை சிதைக்கும் செயலாகும். ஒரு கலாச்சார அமைப்பு தனது ஆதரவாளர்களுக்கு ராணுவம் போல் எப்படி பயிற்சி அளிக்க முடியும்?. அப்படி என்றால், ராணுவத்தைக் காட்டிலும் ஆர்எஸ்எஸ் படை வலிமையானவர்கள், திறமையானவர்கள் என்று மோகன் பகவத் கூறுகிறாரா?. அவரின் வார்த்தைகளை தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும்.

ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்களையும், ராணுவத்தையும் எப்படி ஒப்பிட முடியும்?. ராணுவத்தினரின் உணர்வுகளை குழிதோண்டி புதைப்பது மோகன்பகவத்தின் பேச்சாகும்.

ராணுவம் குறித்து பேசும் முன், ஆர்எஸ்எஸ் ஆதராவாளர்களுக்கு தலைமை ஏற்று எல்லையில் சென்று மோகன் பகவத் நிற்க வேண்டும்.

இவரு அவர் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top