தீ விபத்தைக் காரணம் காட்டி கோவில் வளாக கடைகளை அகற்றி கார்பரேட்கம்பனிகளுக்கு கொடுக்கமுடிவு!

 

 

கோவில்களில் தீ விபத்தை தடுக்க ஆலய வளாகம் மற்றும் மதில் சுவரையொட்டி உள்ள கடைகளை அகற்ற முடிவு செய்து பிறகு கடைகளை பெரிய கம்பனிகளுக்கு கொடுக்க உள்ளதாக செய்திகள் வருகிறது

 

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெரிய தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த 30-க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து சாம்பலாகின.

 

இதையடுத்து கோர்ட்டு உத்தரவின் பேரில், கோவில் வளாகத்தில் உள்ள கடைகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

 

இந்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் விபத்துகளை தவிர்க்க மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று ஆய்வு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

 

கோவில்களில் விபத்துகளை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கி பேசியதாவது:-

 

* தமிழ்நாட்டில் முதல்கட்டமாக முதுநிலை அந்தஸ்துடைய பெரிய கோவில்களில் தீ தடுப்பு நடைமுறைகள், பாதுகாப்பு முறைகள் ஆகியவற்றை உடனடியாக தணிக்கை செய்யவேண்டும். தணிக்கையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளுக்கு தேவைப்படும் பணியாளர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், பொறியாளர்கள் மற்றும் அதற்கான நிதி தேவை குறித்து அறிக்கையினை தயார் செய்ய வேண்டும். அந்த அறிக்கையினை தலைமைச் செயலாளர் தலைமையில், சம்பந்தப்பட்ட துறை செயலாளர்களைக்கொண்டு அமைக்கப்பட உள்ள குழுவிடம் 2 வாரத்திற்குள் ஒப்படைக்க வேண்டும்.

 

* இந்த அறிக்கையினை, மேற்கண்ட குழு பரிசீலித்து, தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த தனது பரிந்துரைகளை முதல்-அமைச்சரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

 

 

* உடனடி பாதுகாப்பு கருதி, கோவில் வளாகத்திற்குள்ளும், கோவில் மதில் சுவரை ஒட்டியும் அமைந்துள்ள கடைகளை உரிய வழிமுறைகளை பின்பற்றி அகற்றிட வேண்டும். மேலும், அவ்வாறு அகற்றப்பட்ட கடைகளை வேறு இடங்களில் ஒதுக்கீடு செய்யும் சாத்தியக்கூறுகளை ஆராயவேண்டும்.

 

* முதல்கட்டமாக, தமிழ்நாட்டில் உள்ள முதுநிலை அந்தஸ்துடைய பெரிய கோவில்களில் அமைந்துள்ள புராதன சிற்பங்கள், கல்தூண்கள், கட்டுமானங்கள் ஆகியவைகளுக்கு பாதிப்பு ஏற்படாவண்ணம், பாதுகாப்பான மற்றும் தரமான மின் இணைப்புகளை அமைக்கவேண்டும்.

 

 

* மேலும், கோவில்களில் விளக்கு ஏற்றுவதற்காக பக்தர்கள் கொண்டு வரும் எண்ணெய், நெய் ஆகியவற்றை ஓரிடத்தில் சேகரித்து வைத்து, அதனையே கோவில்களின் அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்த வேண்டும். மேலும், கோவில் வளாகத்தில் இதை பற்றிய அறிவிப்பு பலகைகள் வைக்கவேண்டும்.

 

* முதுநிலை அந்தஸ்துடைய பெரிய கோவில்களில் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஆய்வினை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மேற்கொண்டு, தீ தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் உபகரணங்கள் சரியாக உள்ளனவா? என உறுதி செய்ய வேண்டும்.

 

 

* முதுநிலை அந்தஸ்துடைய பெரிய கோவில் வளாகங்கள் அல்லது அவற்றின் அருகாமையில் ஒரு தீ அணைப்பு வாகனம் தயார் நிலையில் நிறுத்தி வைக்க ஏற்பாடு செய்யவேண்டும்.

 

* தீ அணைப்பு உபகரணங்களான தீ அணைப்பான்கள், நீர்தும்பிகள், மணல் வாளிகள், தண்ணீர் வாளிகள் ஆகியனவற்றை அவ்வப்போது பரிசோதனை செய்து, எந்த நேரத்திலும் இயங்கும் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

 

 

* கோவில் சொத்துகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து, அதனை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

* இந்து சமய அறநிலைய துறைக்கு தேவையான அளவில் தொழில்நுட்ப மற்றும் இதர பணியாளர்களை நியமிப்பதற்கும், கோவில்களின் பாதுகாப்பிற்காக ஆயுதம் ஏந்திய காவலர்களை பணியமர்த்த தேவையான ஏற்பாடுகளையும் செய்யவேண்டும்.

 

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி அதிகாரிகளுக்கு ஆணையிட்டுயுள்ளார்.

 

இந்த முடிவிற்கு பின்னால் உள்ள செய்தி என்னவென்றால் கோவில் அருகே உள்ள கடைகள் அனைத்தையும் அகற்றி விட்டு கோவில் பொருட்கள் விற்பதற்கான கடைகளை கார்பரேட் கம்பனிகளுக்கு  ஏலம் விடப்போவதாக தகவல் வந்துள்ளது.பக்தி பொருட்களுக்கான மார்க்கெட் பெரிதாக இருப்பதாலும் அவைகளை முறைப்படுத்தி கொள்ளை லாபம் சம்பாதிக்க கார்பரேட் கம்பனிகள் முடிவு செய்து இருகின்றன. சமிபத்தில் மத்திய அரசு கங்கையின் புனித நீர் என்று பாட்டிலில் நீர் அடைத்து ஒவ்வொரு தபால் நிலையங்களிலும் விற்பனை செய்தார்கள்.அது சரியாக போகவில்லை இப்போது அதற்கு மாற்றாக இந்த தீ விபத்தை பயன்படுத்தி பக்தி மூலம் சம்பாதிக்க பார்கிறார்கள்.ஆகையால்தான் முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறார்

 

ஆனால்,தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும், சிப்காட் வளாகத்தில் அமைய உள்ள 2-வது ஆலைக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கக்கூடாது என்பதனை வலியுறுத்தியும் தொடர் போராட்டம் பொதுமக்களாலும் மாணவ, மாணவிகளால் நடத்தப்பட்டு வருகிறது இதை தமிழக அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது

 

ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்திலிருந்து  வெளியேறும் புகையினால் மாசு ஏற்படுவதாகவும், அந்த புகையில் நச்சுத்தன்மை இருப்பதாகவும் குமார ரெட்டியார்புரம் கிராம மக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.  ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்திலிருந்து  வெளியேறும் விஷம் கலந்த கழிவு நீரைக் குடித்து  கால்நடைகள் மரணிக்கின்றன ஆகவே, அந்த நிறுவனத்திற்கு தடை விதிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் பலமுறை மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தனர்.ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

 

ஆனால், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் விபத்துகளை தவிர்க்க மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆய்வு கூட்டம் நடத்துகிறார்.இதுதான் பக்தியின் அரசியல்

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top