கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களுடன் இன்று மாலை எண்ணெய் நிறுவனங்கள் பேச்சுவார்த்தை

மண்டல அளவில் நடைபெறும் வாடகை டெண்டர் முறையை மாற்றி மாநில அளவில் டெண்டர் நடைபெறும் என்று மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது.

இந்த புதிய டெண்டர் முறையினால் பல ஆயிரம் தொழிலார்கள் வேலையிழக்க கூடும் மற்றும் லாரி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்க கூடும் என்று இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் கடந்த 12-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

இதனால் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் உள்ள 4500 கியாஸ் டேங்கர் லாரிகள் 3-வது நாளாக இன்றும் இயங்கவில்லை.

இதே கோரிக்கையை வலியுறுத்தி மேற்கு வங்கம், பீகார், ஒரிசா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களை சேர்ந்த கிழக்கு மண்டல கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

இந்த போராட்டத்தால் எண்ணெய் நிறுவனங்களுக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து பாட்டிலிங் மையங்களுக்கு சமையல் எரிவாயு கொண்டு செல்லும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டம் தொடர்ந்தால் கியாஸ் பற்றாக்குறை அதிகரிக்கக்கூடும். இதனால் இன்னும் 2 அல்லது 3 நாட்களில் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

மேலும் கியாஸ் டேங்கர் லாரிகளில் வேலை செய்யும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிரைவர்கள் மற்றும் கிளீனர்கள் வேலை இழப்பு ஏற்பட்டு பெரும் பாதிப்பு அடைந்துள்ளாரகள். இந்த போராட்டத்தால் லாரி உரிமையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 2 கோடி முதல் இது வரை 6 கோடி ருபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், சில முக்கியான இடங்களில் கியாஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மத்திய அரசுக்கு இந்த போராட்டம் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மத்திய அரசுக்கு கழ்டமும் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னையை சரி செய்ய மத்திய அரசு முன்வந்துள்ளது.

இந்த வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் பேச்சு வார்த்தைக்கு வரும் படி லாரி உரிமையாளர்களுக்கு எண்ணெய் நிறுவனங்கள் நேற்று அழைப்பு விடுத்தது. பேச்சு வார்த்தையில் பங்கேற்க லாரி உரிமையாளர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இந்த பேச்சுவார்த்தை இன்று மாலை மும்பையில் நடைபெறுகிறது. இதில் எண்ணெய் நிறுவன அதிகாரிகள், லாரி உரிமையாளர்கள் கலந்து கொள்கிறார்கள். இதில் சுமுக உடன்பாடு ஏற்பட்டால் போராட்டம் வாபஸ் ஆக வாய்ப்புள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top