ராமேசுவரம் மீனவர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் இன்று தொடங்கியது

தமிழக மீனவர்கள் தங்கள் பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் மீன்பிடித்து வருகின்றனர். தொடர்ச்சியாக தமிழக மீனவர்கள் மீதி எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக குறி இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி வருகிறது. சில வருடங்களாக தான் இந்த மீன்பிடி எல்லை பிரச்சனை நிலவி வருகிறது.

இலங்கை கடற்படை தமிழக கடலோர மீனவர்களை தொடர்ச்சியா தாக்கியும், அவர்களை பாலியல் வன்புணர்ச்சிக்கு அழகியும், அவர்களின் வலைகள், மீன் பிடி சாதனங்கள் மற்றும் படுகுகளை சேதப்படுத்தியும் வருகிறது. மேலும் தமிழக மீனவர்களை சிறைபிடித்து அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகிறது.

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் குறித்து எந்த சுமக்க தேர்வையும் இந்திய அரசு மேற்கொள்ளாமல் அமைதி காத்து வருகிறது. இதனால் தமிழக மீனவர்களின் உயிர் மற்றும் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிரது.

இந்நிலையில், எல்லை தாண்டி மீன் பிடிக்கும் தமிழக மீனவர்கள் படகுகளுக்கு 17 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கும் புதிய சட்டத்தை இலங்கை அரசு சமீபத்தில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றியுள்ளது.

தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இந்த திட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என்று ராமேசுவரம் மற்றும் தமிழக மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ராமேசுவரத்தில் மீனவர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. பொதுச் செயலாளர் போஸ் தலைமை தாங்கினார்.

கூட்டத்தின் முடிவில் இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் 136 பேரை விடுதலை செய்ய வேண்டும், 175 படகுகளையும் விடுவிக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (14-ந் தேதி) முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி இன்று காலை காலவரையற்ற வேலை நிறுத்தத்தை ராமேசுவரம் மீனவர்கள் தொடங்கினர். கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 16-ந் தேதி ராமநாதபுரம், நாகப்பட்டினம் உள்பட 6 மாவட்ட மீனவர்கள் பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தையும் முற்றுகையிடுகின்றனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top