மோடி பக்கோடா கருத்துக்கு எதிர்ப்பு: பட்டதாரி இளைஞர்கள் போராட்டம்

 

மோடியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பொன்னேரியில் பட்டதாரி இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பக்கோடா விற்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

பட்டதாரி இளைஞர்கள் வேலை இல்லா திண்டாட்டத்தை போக்க பக்கோடா விற்பனையில் ஈடுபடலாம் என்று பிரதமர் மோடி கருத்து தெரிவித்து இருந்தார்.

இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மோடியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பொன்னேரியில் பட்டதாரி இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பக்கோடா விற்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தயாராக கொண்டு வந்து இருந்த அடுப்பில் பக்கோடா தயாரித்தனர். பின்னர் அதனை அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் பஸ் பயணிகளுக்கு இலவசமாக கொடுத்தனர்.

இதைத்தொடர்ந்து பட்டதாரி இளைஞர்களை இழிவுபடுத்தும் வகையில் மோடி கருத்து தெரிவித்ததாக அவர்கள் கோ‌ஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top